23.3.2018 வெள்ளிக்கிழமை இன்றய ராசிபலன்

80

 

வெள்ளி

நல்ல நேரம்    6-9, 1-3, 5-6, 8-10
எமகண்டம்      மாலை மணி 03.00-04.30
இராகு காலம்  காலை மணி 10.30-12.00

  • 23.3.2018 வெள்ளிக்கிழமை ஹேவிளம்பி வருடம் பங்குனி மாதம் 9-ம் நாள்
  • வளர்பிறை. சஷ்டி திதி காலை 11.56 வரை அதன் பிறகு சப்தமி. ரோகிணி நட்சத்திரம் மாலை 04.43 வரை அதன் பிறகு மிருகசீரிஷம். யோகம்: மரணயோகம் மாலை 04.43 வரை அதன் பிறகு சித்தயோகம்.

மேஷம்:மனசாட்சி படி செயல்படும் நாள். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள்.குடும்பத்தில் அனைவரையும் அனுசரித்துச் செல்வது நல்லது. அலுவலகத்தில் சக பணியாளர்களால் பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால் எச்சரிக்கை அவசியம்.. வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். .

ரிஷபம்:விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டாகும்.அலுவலகத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலையே நிலவும். வியாபாரம் வழக்கம்போலவே நடைபெறும்.உதவி கேட்டு தொந்தரவுகள் அதிகரிக்கும். . உத்யோகத்தில் அதிகாரிகள் குறைக் கூறுவார்கள்.வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள முன்வருவீர்கள்.

மிதுனம்: திடீர் செலவுகள் ஏற்படலாம். திட்டமிட்ட சில காரியங்களில் மாற்றம் செய்யும் சூழ்நிலை உருவாகும்.கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். பழைய கடனை தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது.அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சக பணியாளர்களின் ஒத்துழைப்பு இருக்கும். வியாபாரத்தில் பற்று வரவு சுமாராகத்தான் இருக்கும்

கடகம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பிள்ளைகளின் பொறுப்புணர்வை பாராட்டுவீர்கள். காணாமல்போனமுக்கியஆவணங்கள்கடைக்கும்.பிரபலங்கள்உதவுவார்கள் ன்னம்பிக்கையுடன் செயல்படும் நாள்  செயல்படும் நாள். வீட்டிற்குத் தேவையான ஆடம்பரப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்பார்த்த பணம் கிடைப்பதால் உற்சாகமாகக் காணப்படுவீர்கள்

சிம்மம்:ண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். எதிர்கால நலனில் அதிக அக்கரை எடுத்துக் கொள்வீர்கள். பணவரவு திருப்தி தரும். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளைப் பூர்த்தி  செய்வீர்கள்.சகோதரர்கள் வழியில் செலவுகள் ஏற்பட்டாலும், அதனால் மகிழ்ச்சியே உண்டாகும். உறவினருடன் கருத்து வேறுபாடு ஏற்படும் என்பதால், தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.

 

கன்னி: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். உறவினர்களால் மதிக்கப்படுவீர்கள் குடும்பம் அல்லது வேலை தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதை இன்றைக்குத் தவிர்ப்பது நல்லது. வெளியிடங்களில் உணவு அருந்துவதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவும். அலுவலகத்தில் மற்றவர் விஷயங்களில் தலையிடாமல் உங்கள் வேலைகளில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும்.

துலாம்: யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். குடும்ப ரகசியங்களை வெளியில் சொல்வதை தவிர்ப்பது நல்லது. கூடுதல் கவனம் செலுத்துவதன் மூலமே தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. வேலைச்சுமை மிகுந்த நாள்.

விருச்சிகம்: மகிழ்ச்சியான நாள். வாழ்க்கைத்துணையிடமிருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கும். எதிர்பார்த்த பணவரவு உண்டு. தாய்வழி உறவினர்கள் வருகையால் வீட்டில் உற்சாகம் உண்டாகும். சிலருக்கு வாகனயோகம் உண்டு.காலை நேரத்திலேயே கலகலப்பான தகவல் வந்து சேரும். தன்னம்பிக்கையோடும், தைரியத்தோ டும் செயல்படுவீர்கள். விட்டுப் போன ஒப்பந்தங் கள் மீண்டும் கைக்கு கிடைக்கலாம்.

தனுசு:இன்று எந்த செயலிலும் நிதானம் அவசியம். தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நன்மை அளிக்கும். பயணங்களின் போது எச்சரிக்கை மிகவும் அவசியம். எந்த செயலையும் பலமுறை யோசித்துச் செய்வது நன்மை அளிக்கும்.சமயோஜிதமாகவும், சாதுர்யமாகவும் பேசி காரியம் சாதிப்பீர்கள். உறவினர், நண்பர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்துக்கொள்வார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள்.

மகரம்: நலனில் அக்கரை செலுத்த வேண்டிய நாள். உறவினர்கள் வழியில் கடைசி நேரத்தில் உதவிகள் கிடைக்கலாம். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் வந்து சேரும் வாய்ப்பு உண்டு.அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும், என்றாலும் உங்களின் கடின உழைப்பால் சமாளித்துவிடுவீர்கள். வியாபாரம் வழக்கம்போலவே இருக்கும்.

கும்பம்: வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் லாபம் கணிசமாக உயரும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவி கிட்டும் பிள்ளைகளால் ஏற்பட்ட பிரச்சினை அகலும் நாள். பாகப்பிரிவினைகள் சுமூகமாக முடியும். அந்நிய தேசத்திலிருந்து அனுகூலத் தகவல் வரலாம். கெளரவம், அந்தஸ்து உயரும்.

மீனம் :பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் உங்கள் யோசனைக்கு முக்கியத்துவம் தருவார்கள். சிலருக்கு வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேரும் நாள். விலையுயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு. தாய்வழி ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் ஏற்பட்ட கலக்கம் அகலும்.

 

error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...