இன்னும் சில நாட்களில் பூமிக்கு காத்திருக்கும் ஆபத்து

Concept portrayal of China's Mars probe released on August 23, 2016 by lunar probe and space project center of Chinese State Administration of Science, Technology and Industry for National Defence. China Daily/via REUTERS
208

எதிர்வரும் சில நாட்களில் சீன விண்வெளி ஆராய்ச்சி நிலையம் பூமியில் விழும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்வெளியில் 2011-ம் ஆண்டு டியான்காங்-1 என்ற விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தை சீனா அமைத்தது. 9.4 டன் எடை கொண்ட இந்த விண்வெளி நிலையம் விண்ணில் சுற்றி தேவையான தகவல்களை அனுப்பியது. ஆனால் இப்போது அது கட்டுப்பாட்டை இழந்து விண்வெளியில் சுற்றியபடி உள்ளது. அது புவிஈர்ப்பு வட்டத்துக்குள் வந்து, மார்ச்-ஏப்ரல் மாதத்திற்கு மத்தியில் பூமியில் விழும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பூமியை நோக்கி அதிக வேகத்தில் வரும் விண்வெளி ஆய்வு நிலையமானது, விண்வெளியில் காற்றுமண்டலத்தில் ஏற்படும் உராய்வினால் தீப்பிடித்து அதன் பெரும் பகுதி எரிந்து சாம்பலாகிவிடும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஒரு சில பாகங்கள் எரியாமல் பூமியில் விழக்கூடிய வாய்ப்பு இருப்பதாகவும், இதனால் ஆபத்து ஏற்படலாம் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தின் புதிய கணிப்பின்படி, மார்ச் 30-ம் தேதியில் இருந்து ஏப்ரல் 2-ம் தேதிக்குள் டியான்காங்-1 ஆராய்ச்சி நிலையம், பூமியில் விழும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இன்னும் ஒரு வாரத்தில் இந்த நிகழ்வு நடைபெற உள்ளது.

பூமியை நோக்கி வரும் விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தின் சில பாகங்கள் மிகப்பெரியதாக இருக்கலாம். அவை ஸ்பெயின், போர்ச்சுக்கல், பிரான்ஸ் மற்றும் கிரீஸ் ஆகிய நாடுகளில் விழும் என எதிர்பார்க்கப்படுகிறது.

You might also like
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...