பால் அருந்துவதில் இப்படியொரு ஆபத்தா?

62

பொதுவாக பால் ஓர் நிறையுணவு என்றும் மிகவும் போசாக்கான உணவு என்றுமே நாம் கற்றுக்கொண்டுள்ளதுடன் அதiனை பின்பற்றியும் வருகின்றோம்.
எனினும் அண்மைய ஆய்வுத் தகவல் ஒன்று இதனை முற்று முழுதாக பொய்ப்பிக்கும் வகையில் தகவல்களை வெளியிட்டுள்ளது.
அதாவது பால் அருந்துவது புற்று நோயை ஏற்படுத்தக் கூடியது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது புற்றுநோய் பலரை உயிரை காவு வாங்கிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக மார்பக புற்றுநோய் பல பெண்களையும் அமைதியாக தாக்கி அவஸ்தைப்படச் செய்கிறது. இப்படி மார்பக புற்றுநோய் பலரையும் தாக்குவதற்கு முக்கிய காரணம் நாம் உண்ணும் உணவுப் பொருட்கள் தான்.
சமீபத்திய ஆய்வு ஒன்றில் நாம் தினமும் குடிக்கும் பால் மார்பக புற்றுநோயின் அபாயத்தை அதிகரிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. சரி, இப்போது அதுக் குறித்து விரிவாக காண்போம். தொடர்ந்து படியுங்கள்.
கடந்த சில ஆண்களாக புற்றுநோய்களில் அமைதியாகத் தாக்கிக் கொண்டிருக்கும் ஒரு வகை தான் மார்பக புற்றுநோய். இப்படி மார்பக புற்றுநோயின் தாக்கம் அதிகரிப்பதற்கு காரணமாக மருத்துவ நிபுணர்கள், நாம் தினமும் குடித்துக் கொண்டிருக்கும் பால் தான் என நம்புகின்றனர்.
சமீபத்தில் நார்வே ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில், தினமும் 1 அல்லது 1ஃ2 கப் பாலைக் குடிப்பவர்களை விட, 3 கப் பாலைக் குடிப்பவர்களுக்கு, 3 மடங்கு அதிகமாக மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புக்கள் உள்ளது தெரிய வந்துள்ளது
சமீபத்திய புள்ளி விவரத்தின் படி, உலகில் மார்பக புற்றுநோயால் பின்லாந்து, ஸ்வீடன், பிரிட்டன், கனடா மற்றும் அமெரிக்கா போன்ற பகுதிகளில் வாழ்பவர்கள் தான் அதிகமாக பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.
உலகிலேயே இந்த நாடுகளில் மார்பக புற்றுநோய் அதிகம் வருவதற்கு காரணம், அங்கு பால் உற்பத்தியும், அதைப் பருகுவோரின் எண்ணிக்கையும் அதிகம் இருப்பது தான் காரணம்
பாலில் உள்ள ஹார்மோன்களும், குறிப்பிட்ட உட்பொருட்களும் புற்றுநோயை உண்டாக்கக்கூடியவை. மேலும் இத்தகைய பாலில் சுத்திகரிக்கப்பட்ட வைட்டமின் டி சத்துக்கள் சேர்க்கப்படுகிறது. மருத்துவ நிபுணர்களும், மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களது உடலை சோதித்ததில், சிந்தடிக் வைட்டமின் டி இருமடங்கு அதிகம் இருப்பதைக் கண்டறிந்துள்ளனர்.
ஒருவருக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கு மோசமான டயட், காய்கறிகள், மீன் போன்றவற்றை குறைவாக சாப்பிடுவது, சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையை அதிகம் சாப்பிடுவது போன்றவையும் காரணங்களாகும்.
எனவே, உணவு உட்கொள்ளும் போது இந்த விடயங்களை கருத்திற் கொண்டு செயற்பட வேண்டியது அவசியமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...