ஸ்மித், வார்னருக்கு ஓராண்டு காலத் தடை

81

அவுஸ்திரேலிய அணியின் தலைவர் மற்றும் உதவித் தலைவராக செயற்பட்டு வந்த ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோருக்கு ஓராண்டு கால போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பந்தை சேதப்படுத்திய சம்பவம் தொடர்பில் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோருக்கு தலா ஒரு ஆண்டு தடை விதிக்கப்பட்டது. இந்தியன் பிரிமீயர் லீக் தொடரில் பங்கேற்க பி.சி.சி.ஐ.,யும் தடை விதித்தது.

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில், ஆஸ்திரேலிய வீரர் பான்கிராப்ட் சிக்கினார். இந்த திட்டத்திற்கு, கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், துணைக்கேப்டன் வார்னர் துணை போனது தெரியவந்தது. இதனால், இவர்களின் பதவி பறிக்கப்பட்டது. இதுகுறித்து விசாரித்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், ஸ்மித் ஒரு டெஸ்டில் விளையாட தடை, 100 சதவீத சம்பளம் அபராதமாக விதித்தது. பான்கிராப்டுக்கு, 75 சதவீத சம்பளம் மட்டும் அபாராதம் விதிக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டு சார்பில் தனியாக விசாரிக்கப்பட்டது.
முடிவில், ஸ்மித், வார்னர் இருவரும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க 12 மாதங்கள் தடை விதிக்கப்பட்டது.
அடுத்த இரு ஆண்டுகளுக்கு இவர்கள் ஆஸ்திரேலிய அணி கேப்டனாக செயல்படவும் தடை விதிக்கப்பட்டது.
பந்தை சேதப்படுத்தி சிக்கிய பான்கிராப்டிற்கு 9 மாதம் தடை விதிக்கப்பட்டது.
தடையை எதிர்த்து கிரிக்கெட் ஆஸ்திரேலியாவில் அப்பீல் செய்ய, இந்த மூன்று வீரர்களுக்கும் வாய்ப்பு தரப்படுகிறது.
இதையடுத்து, ஸ்மித், வார்னர், பான்கிராப்ட் என, மூன்று வீரர்களும், தென் ஆப்ரிக்காவில் இருந்து உடனடியாக நாடு திரும்புகின்றனர்.

You might also like
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...