காவிரி விவகாரத்தில் விளையாட வேண்டாம் என கமல் எச்சரிக்கை

51

காவிரி விவகாரத்தில் விளையாட வேண்டாம் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
ஓட்டுக்காக இவ்வாறு விளையாடக் கூடாது என அவர் குறிப்பிட்ள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து முதல்வரை வலியுறுத்த உள்ளேன். இதுதொடர்பாக அவரை சந்திக்க நேரம் கேட்டுள்ளேன். மேலாண்மை வரியம் அமைப்பது ஒன்றும் கடினமானது அல்ல. பிரதமர் நினைத்தால் மேலாண்மை வாரியத்தை எளிதில் அமைக்கலாம். காவிரி விவகாரத்தில் ஓட்டுக்காக விளையாட வேண்டாம்
காவிரி விவகாரத்தில் எம்.பிக்கள் ராஜினாமா செய்தால் அதனை வரவேற்கிறேன். மேலும், காவிரி விவகாரம் தொடர்பாக படிப்படியாக இறங்கி வருவது நல்லதல்ல.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக வரும் ஏப்ரல் 1ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தூத்துக்குடி மக்களோடு போராட்ட களத்துக்கு செல்ல இருக்கிறேன் இவ்வாறு அவர் கூறினார்.

You might also like
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...