பாலிவுட் நட்சத்திரம் ரஜினியைப் போன்றவர் – பிரபுதேவா

44

இந்த பாலிவுட் நட்சத்திரம் சுப்பர் ஸ்டார் ரஜினியைப் போன்றவர் என டான்ஸ் மாஸ்டர், இயக்குனர், நடிகருமான பிரபுதேவா தெரிவித்துள்ளார்.

2009-ல் சல்மான்கான் நடிப்பில் வெளியான ‘வான்டட்’ படத்தை இயக்கியவர் பிரபுதேவா. அவர் மீண்டும் சல்மான்கான் படத்தை இயக்குகிறார்.
“சல்மான்கானுடன் சேர்ந்து பணியாற்றுவது எனக்கு பிடிக்கும். முதலில் நாங்கள் வேலை பார்த்த போது அவ்வளவாக பேசியது இல்லை. பின்னர் பேசினோம், நெருங்கிய நண்பர்கள் ஆகிவிட்டோம்.

திரை உலகில் சல்மான்கான் போல உண்மையாக இருப்பவர்களை பார்ப்பது அரிது. திரை உலகில் உள்ள பலரைப்போல அவர் உண்மையில் நடிக்க தெரியாதவர். சல்மான்கான் அன்பானவர். அவர் கடின உழைப்பாளி. அவர் பல விஷயத்தில் ரஜினி சார் போன்றவர். இருவருக்கும் தனி ஸ்டைல் உள்ளது. அது அனைவருக்கும் பிடிக்கும்.

சல்மான்கான் யாரையும் கவர வேண்டும் என்று முயற்சி செய்யமாட்டார். ஆனால் பார்ப்பவர்களுக்கு அவரைப்பிடித்து போகும். இப்போது அவரை வைத்து ‘தபாங்3’ பெரிய படம் இயக்குகிறேன்” என்றார்.

You might also like
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...