சத்தியராஜின் மகள் தொடர்பாக வெளியான செய்தி வெறும் வதந்தி

38

பிரபல நடிகர் சத்ராஜின் மகள் தொடர்பில் வெளியான தகவல்கள் வெறும் வதந்தி என மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சத்யராஜின் மகள் திவ்யா சினிமாவில் நடிக்க இருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவி வருவதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
தற்போது வடிவேல் என்பவர் தயாரிக்கும் புதிய படத்தில் கதாநாயகியாக நடிக்க திவ்யாவை ஒப்பந்தம் செய்து இருப்பதாகவும் இதன் மூலம் நடிகையாக அவர் அறிமுகமாக இருக்கிறார் என்றும் மீண்டும் தகவல் பரவியது.

இதற்கு விளக்கம் அளித்து திவ்யா நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“நான் நடிக்கப்போவதாக வெளியான செய்தியை கண்டு அதிர்ச்சியுற்றேன். மீண்டும் மீண்டும் நான் சினிமாவில் நடிப்பதாக வரும் தகவல்களை மறுக்க வேண்டி இருக்கிறது. திரைத்துறை மீது எனக்கு அபரிமிதமான மரியாதை உண்டு. நான் சத்துணவு துறையில் கவனம் செலுத்துகிறேன்.

காலை முதல் மாலைவரை ஓய்வில்லாமல் வேலை இருக்கிறது. நான் நடிக்கப் போவதாக கூறப்படும் படத்தின் இயக்குனர் வடிவேல் எங்கள் குடும்ப நண்பர். அவரது படத்தில் என் தந்தை சத்யராஜ் நடிக்கிறார். நான் அந்த படத்தை தயாரிக்கவும் இல்லை. அதில் நடிக்கவும் இல்லை.” இவ்வாறு திவ்யா கூறியுள்ளார்.

You might also like
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...