தென் ஆபிரிக்க கிரிக்கட் வீரர் ரபாடா உபாதை காரணமாக பாதிப்பு

42

தென்ஆப்பிரிக்கா அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ரபாடா. சமீபத்தில் முடிவடைந்த அவுஸ்திரேலியாவிற்கு எதிரான நான்கு போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரை தென்ஆப்பிரிக்கா 3-1 என கைப்பற்ற முக்கிய காரணமாக இருந்தார். அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய ரபாடா தொடர் நாயகன் விருதை பெற்றார்.

ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற கடைசி டெஸ்டின் போது முதுகு வலியால் அவதிப்பட்டார். இதனால் சுமார் மூன்று மாதம் கிரிக்கெட்டில் இருந்து விலகி இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதனால் ரபாடா ஐபிஎல் தொடரில் பங்கேற்கமாட்டார் என்பது உறுதியாகியுள்ளது. டெல்லி டேர்டெவில்ஸ் அணி 4.2 கோடி ரூபாய் கொடுத்து ரபாடாவை ஏலம் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

You might also like
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...