பூமிக்கு வெளியில் அதி சொகுசு ஹோட்டல்

38

ஆச்சரியம் ஆனால் உண்மை, விண்வெளியில் மக்கள் பயன்பாட்டிற்காக அரோரா ஸ்டேஷன் என்ற சொகுசு ஹோட்டல் கட்ட ஓரியன் ஸ்பேன் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
பொதுவாக மக்கள் கூட்டம் அதிகம் வரும் இடங்களில் ஹோட்டல்கள் கட்டப்படுவது வழக்கம். ஆனால் ஓரியன் ஸ்பேன் என்ற விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் பூமிக்கு வெளியே விண்வெளியில் மக்கள் பயன்பாட்டிற்காக சொகுசு ஹோட்டல் கட்ட திட்டமிட்டுள்ளது. அதற்கு அரோரா ஸ்டேஷன் என்று பெயரிட்டுள்ளது.

இதற்கான பணிகள் விரைவில் தொடங்கி, 2021-ம் ஆண்டு நிறைவடையும் என கூறப்படுகிறது. இந்த ஹோட்டலில் 2022-ல் இருந்து மக்கள் தங்குவதற்கு அனுமதிக்கப்படுவார்கள். பூமியில் இருந்து தக்க பயிற்சி கொடுக்கப்பட்ட பின் மனிதர்கள் இந்த ஹோட்டலுக்கு அழைத்து செல்லப்படுவார்கள். இதற்காக மிகவும் பாதுகாப்பான முறையில் இயங்கும் ராக்கெட் வடிவமைக்கப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த அரோரா ஸ்பேஸ் ஸ்டேஷன் பெரிய ஜெட் ராக்கெட் போல இருக்கும். இதன் நீளம் 43.5 அடியும், அகலம் 14.1 அடியும் இருக்கும். இதன் கொள்ளளவு 5,650 கன அடி இருக்கும். இது மக்கள் தங்குவதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு அமைக்கப்பட உள்ளது. இந்த ஸ்பேஸ் ஸ்டேஷனில் ”ஓரியன் ஸ்பேன்” நிறுவனத்தின் அலுவலகமும் கட்டப்பட உள்ளது.

இதில் 6 பயணிகள் மற்றும் 2 அதிகாரிகள் ஒரே சமயத்தில் தங்க முடியும். இதில் படங்களில் காட்டுவது போல மிதந்து கொண்டு இருக்க வேண்டிய அவசியம் இல்லை. சாதாரண பூமியில் இருக்கும் பகுதி போலவே இதில் செயற்கை புவியீர்ப்பு விசை உருவாக்கப்பட்டு இருக்கும். இதனால் இங்கு தங்கும் நபர்களுக்கு பெரிய அளவில் பயிற்சி தேவை இல்லை.

பூமியில் இருந்து 320 கிலோ மீட்டர் தூரத்தில் இந்த ஸ்பேஸ் ஸ்டேஷன் கட்டப்பட உள்ளது. இதற்கான புக்கிங் எப்போது தொடங்கும் என்றும், இதற்கான செலவு எவ்வளவு என்று கூறப்படவில்லை.

இதற்கான கட்டுமான செலவு எவ்வளவு என்று கூறப்படவில்லை என்றாலும், 12 நாட்கள் இந்த ஹோட்டலில் தங்க இந்திய மதிப்பில் 61 கோடி ரூபாய் செலவு ஆகும். ஒரு நாளுக்கு 5 கோடி ரூபாய் வரை செலவு ஆகும். மற்ற நிறுவனங்கள் விண்வெளிக்கு அழைத்து செல்ல வாங்கும் தொகையை விட இது குறைவு என கூறப்படுகிறது.

You might also like
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...