துபாயில் இந்தியருக்கு கிடைத்த அதிர்ஸ்டம்

33

துபாயில் நடைபெற்ற லொத்தர் சீட்டிலுப்பில் இந்தியர் ஒருவருக்கு 20 கோடி இந்தியா ரூபா மதிப்புள்ள பரிசு கிடைத்துள்ளது.
துபாய் நாட்டில் நடைபெற்ற ஜாக்பாட் குலுக்கலில் வென்ற இந்தியர் இந்த பணத்தை வைத்து ஏழை மக்களுக்கு உதவி செய்ய விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலத்தை சேர்ந்தவர் ஜான் வர்கீஸ், துபாய் நாட்டில் உள்ள ஒரு நிறுவனத்தில் டிரைவராக கடந்த 2016-ம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார்.

அபுதாபியில் பிரசித்தி பெற்ற ‘பிக் டிக்கெட்’ லாட்டரி சீட்டை இவர் வாங்கி இருந்தார். இவர் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு ஜாக்பாட் பரிசான 1.2 கோடி திர்ஹம்கள் (இந்திய மதிப்புக்கு 20 கோடியே 74 லட்சத்து 99 ஆயிரத்து 691 ரூபாய்) கிடைத்துள்ளது.

இந்த தொகையை தனது நான்கு நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள இருப்பதாக அவர் கூறினார். இதுகுறித்து அவர் பேசியதாவது:-

எனக்கு இப்படி ஒரு அதிர்ஷ்டம் அடிக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை. சமீபத்தில் முட்டாள்கள் தினம் முடிந்தது. அதனால் என் நண்பர்கள் யாரோ என்னை ஏமாற்றுகிறார்கள் என முதலில் நினைத்தேன். அது தவறான அழைப்பாக இருக்குமோ என கூட சந்தேகப்பட்டேன்.

அது உறுதிபடுத்தப்பட்ட பின்னரும் கேரளாவில் உள்ள எனது குடும்பத்தினரிடம் பேச சிறிது நேரம் எடுத்து கொண்டேன். இது புதிய அனுபவமாக உள்ளது. எனது சிறிய குடும்பத்தில் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவர்களது எதிர்காலத்திற்காக இந்த பணத்தை உபயோகிப்பேன். கல்வியில் பயன்படுத்துவதை விட வேறு நல்ல வழி இருக்கும் என நினைக்கவில்லை. ஒரு பகுதியை ஏழை மக்களுக்கு உதவ பயன்படுத்துவேன் என அவர் கூறினார்.

You might also like
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...