உலக அழகிக்கும் மாமியார் கொடுமையா?

14

முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் அவரது மாமியாரின் 70ம் பிறந்த தின நிகழ்வில் பங்கேற்காமை பாலிவுட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
என்ன இருந்தாலும் ஐஸ்வர்யா ராய் இப்படி செய்திருக்கக் கூடாது என்று தான் பாலிவுட்டில் பேசப்படுகிறது. பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சனுக்கும் அவரின் மாமியார் ஜெயா பச்சனுக்கும் இடையே ஏழாம் பொருத்தம் என்று பிரபலங்கள் பல ஆண்டுகளாக கூறி வருகிறார்கள். மேலும் நாத்தனார் ஸ்வேதா நந்தாவையும் ஐஸ்வர்யா ராய்க்கு பிடிக்காதாம்.

ஜெயா பச்சன் கடந்த 9ம் தேதி தனது 70வது பிறந்தநாளை கொண்டாடினார். பிறந்தநாளை முன்னிட்டு பாலிவுட் பிரபலங்களுக்கு பார்ட்டி கொடுக்கப்பட்டது.

ஜெயா பச்சனின் பிறந்தநாள் பார்ட்டியில் அமிதாப், அபிஷேக், ஸ்வேதா ஆகியோர் கலந்து கொண்டு கேக் வெட்டி மகிழ்ந்தனர். ஆனால் மருமகள் ஐஸ்வர்யா ராயும், பேத்தி ஆராத்யாவும் பார்ட்டிக்கு வரவில்லை.

என்ன தான் மாமியார் மீது கோபம் இருந்தாலும் அவரின் பிறந்தநாள் பார்ட்டிக்கு கூடவா வராமல் இருப்பார் என்று ஐஸ்வர்யா ராய் பற்றி பேச்சு கிளம்பியுள்ளது.

பாலிவுட் நடிகை சோனம் கபூர் ஜெயா பச்சன் பார்ட்டியில் கலந்து கொண்டதுடன் சமூக வலைதளத்தில் அவரை பற்றி பெருமையாக பேசி வாழ்த்து தெரிவித்திருந்தார்.

ஷாருக்கானின் மகள் சுஹானா பிரபல இயக்குனர் கரண் ஜோஹாருடன் ஜெயா பச்சன் பிறந்தநாள் பார்ட்டிக்கு வந்திருந்தார். அப்போது அவர்கள் சேர்ந்து எடுத்த செல்ஃபி வைரலானது.

நடிகர் சயிப் அலி கானின் மகள் சாரா தனது அம்மா அம்ரிதாவுடன் பார்ட்டிக்கு வந்திருந்தார். சாரா ரன்வீர் சிங் ஜோடியாக சிம்பா படத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...