உங்களது பேஸ்புக் கணக்கில் தகவல் களவாடப்பட்டுள்ளதா என்பது எவ்வாறு அறிந்து கொள்வது

உங்களது பேஸ்புக் கணக்கிலிருந்து தகவல்கள் காளவாடப்பட்டுள்ளதா என்பதனை அறிந்து கொள்வது எவ்வாறு என்பது பற்றி நாம் தெரிந்து கொள்வோம்.
பேஸ்புக் பயன்படுத்துவோர் தகவல்கள் ரகசியமாக மற்ற நிறுவனத்திற்கு விற்கப்பட்ட விவகாரம் அம்பலமாகி இருக்கும் நிலையில், உங்களின் பேஸ்புக் டேட்டா திருடப்பட்டதை கண்டறிவது எப்படி என தொடர்ந்து பார்ப்போம்.

கேம்ப்ரிடிஜ் அனலிடிகா விவகாரம் பேஸ்புக் நிறுவனத்திற்கு பெரும் பிரச்சனைகளை ஏற்படுத்தியிருப்பது அனைவரும் அறிந்ததே. பயனர்களின் தகவல்கள் ரகசியமாக சேகரிக்கப்பட்டு தேர்தல் சுயலாபத்திற்காக பயன்படுத்தப்பட்ட விவகாரம் உலகின் பல்வேறு நாடுகளில் பேஸ்புக் வலைத்தளம் மீது இருந்த நம்பிக்கை கேள்வி குறியாகிவிட்டது.
கடந்த இருபது நாட்களுக்கும் அதிகமாக பேஸ்புக் வலைத்தளம் டேமேஜ் கண்ட்ரோல் மோடில் இயங்கி வருகிறது. இந்நிலையில் பேஸ்புக் பயன்படுத்துவோரில் சுமார் ஒன்பது கோடி பேரின் தகவல்கள் திருடப்பட்டத்தாக மார்க் சூக்கர்பெர்க் அறிவித்திருந்தார். அந்த வகையில் பேஸ்புக் பயனரின் தகவல்கள் திருடப்பட்டிருப்பதை பயனர்கள் தெரிந்து கொள்ள அந்நிறுவனம் புதிய வழிமுறையை அறிவித்து இருக்கிறது.

பேஸ்புக் நியூஸ்பீடில் அந்நிறுவனம் சார்பில் நோட்டிபிகேஷன்கள் அனுப்பப்படும். உங்களது தகவல்கள் கேம்ப்ரிட்ஜ் அனலிடிகா மூலம் எடுக்கப்பட்டு இருந்தால், பேஸ்புக் நோட்டிபிகேஷனில் பேஸ்புக் எவ்வாறு This Is Your Digital Life வலைத்தளத்தை முடக்கியது என்ற விவரம் இடம்பெற்றிருக்கும்.

நோட்டிபிகேஷனில் இருக்கும் லின்க்-ஐ கிளிக் செய்து நீங்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டு இருக்கின்றீர்கள் என்பதை தெரிந்து கொள்ள முடியும். எனினும் இந்த பாதிப்பில் சிக்காதவர்களுக்கு பேஸ்புக் பயனர்கள் தங்களின் தனிப்பட்ட தகவல்களை பயன்படுத்தும் செயலிகளை எவ்வாறு இயக்க வேண்டும் என்ற விவரம் இடம்பெற்றிருக்கும்.

முன்னதாக கியூப்யூ எனும் நிறுவனத்தை முடக்கியிருப்பதாக பேஸ்புக் அறிவித்தது. இந்த நிறுவனம் பயனரின் தகவல்களை வித்தியாசமான போட்டிகளின் மூலம் சேகரித்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

சமீபத்தில் பேஸ்புக் நிறுவனர் மார்க் சூக்கபெர்க் அமெரிக்க பாராளுமன்றக்குழுவின் முன் ஆஜராகி பேஸ்புக் செய்த தவறுக்கு மன்னிப்பு கோரியிருந்தார். இது முற்றிலும் என் தவறு, என்னை மன்னித்து விடுங்கள் என மார்க் சூக்கர்பெர்க் எழுத்துப்பூர்வமாக தெரிவித்து இருப்பதாக அமெரிக்க எரிசக்தி மற்றும் பொருளாதார கமிட்டி தெரிவித்துள்ளது.

You might also like
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...