காவிரி பிரச்சினைக்கு கவிதை வரிகளில் எதிர்ப்பு

27

காவிரிப் பிரச்சினைக்கு கவிதை வரிகளில் கவிஞர் பா.விஜய் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து பா.விஜய் வெளியிட்டுள்ள வீடியோவில், தறிகெட்டுப்போன நாட்டுக்கு எதுக்குடா கிரிக்கெட்டு, தரங்கெட்டுப் போன அதிகார வர்க்கத்தை சரிகட்டு என்று கூறியிருக்கிறார். சூஊயரஎநசலஆயயெபநஅநவெடீழயசன
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகத்தில் பல்வேறு வகையான போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஐ.பி.எல். போட்டிகளை தமிழகத்தில் நடத்தக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து நேற்று போராட்டம் நடத்தப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்ட இயக்குனர்கள் பாரதிராஜா, அமீர் மற்றும் வைரமுத்து, நாம் தமிழர் கட்சிதலைவர் சீமான், எம்.எல்.ஏ.க்கள் கருணாஸ், தமிமுன் அன்சாரி உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், பிரபல பாடலாசிரியர் பா.விஜய் ஹதறிகெட்டுப்போன நாட்டுக்கு எதுக்குடா கிரிக்கெட்டு, முதல தரங்கெட்டுப் போன அதிகார வர்க்கத்தை சரிகட்டு’ என்று தான் எழுதிய கவிதை ஒன்றை வீடியோ வடிவில் படித்து அதனை அவரது டுவிட்டர் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் பா.விஜய் பேசுவதாவது,

தறிகெட்டுப்போன நாட்டுக்கு எதுக்குடா கிரிக்கெட்டு
முதல தரங்கெட்டுப் போன அதிகார வர்க்கத்தை சரிகட்டு

சே சேன்னு கூட்டம் மெதப்புல மெதக்கலாம் சேப்பாக்கம்
அத செங்கல் செங்கலா எங்க சிங்கக் கூட்டம் தூள் தூளாக்கும்

கடற்கரை ஓரத்தை பூட்டி வைச்சுப்புட்டியே காவலாளி
புயல் காத்துக்கு பூட்டி போட்டவன் யாருடா புத்திசாலி

ஆட்டம் நடக்கட்டும் மட்டைய தூக்கி அடிப்பாய்ங்க
எங்க பசங்க ஒருநாள் பாராளுமன்றத்தையே புடிப்பாய்ங்க

விளம்பரத்துல தன்னையே வித்தவனைல்லாம் வீரன்ற
தேச எல்லையில செத்த எத்தன பேருக்கு இது தேவைன்ற

ஒரே இந்தியா ஒரே ரத்தம்னு கூவுறியே
அட காவிரிக்கு மட்டும் கட்டத்தை மாத்தி தாவுறியே

ஆவட்டும் சாரே ஆனவரைக்கும் ஊற ஏமாத்து
எங்க பச்ச தமிழனுக்கு புரிஞ்சு போச்சு உன் பம்மாத்து

காவிரி எங்க கரிகாலனால தான் டா ஆறாச்சு
எங்க தொண்டய மிறிச்சு தொண்டுனு சொல்ற வாய் சேராச்சு

காவிரியில பலபேர் கால் கழுவ மட்டும் தான் கால் வச்சான்
அப்படி வீணான தண்ணியில விவசாய தமிழன் தான் நெல் வச்சான்

பால் குடிச்ச சிசிவோட கழுத்த நெறுச்ச பேய்க்கூட்டம்
உங்கள வெறட்டி அடிச்சு வெளுக்கத்தாண்டா இந்த போராட்டம்

தறிகெட்டுப் போன நாட்டுக்கு எதுக்குடா கிரிக்கெட்டு
முதல தரங்கெட்டுப் போன அதிகார வர்க்கத்தை சரிகட்டு’

என கவிதை வரிகளில் மத்திய அரசாங்கத்திற்கு எதிரான தனது நிலைப்பாட்டை பா.விஜய் அழுத்தமாக பதிவு செய்துள்ளார்.

You might also like
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...