அதிகளவில் வெள்ளைப்பூண்டு உட்கொள்வதால் ஏற்படக்கூடிய

50

அதிகளவில் பூண்டு உட்கொள்வதனால் ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் பற்றி அறிந்து கொள்வோம் வாருங்கள்…
இன்றைக்கு பெரும்பாலானோர் மருத்துவ ரீதியாக விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள். ஏதாவது ஒரு மருத்துவக் குறிப்பாக இந்த உணவு நல்லது என்று சொன்னால் போதும் மூன்று வேலைக்கும் சாப்பிடுவது தொடர்கிறது.

பூண்டில் மருத்துவக் குணங்கள் அதிகமாக நிறைந்துள்ளதால், வெறும் வயிற்றில் சாப்பிடும் போது ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றது.

பூண்டில் விட்டமின் டீ6, ஊ, கனிமங்கள், மாங்கனீசு, ஆன்டி-பயாடிக் போன்ற அத்தியாவசிய சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது.

எனினும் அளவுக்கு அதிகமாக உட்கொள்ளும் போது பக்கவிளைவுகளையும் ஏற்படுத்திவிடுகிறது.

பூண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

தினமும் ஒரு பச்சை பூண்டை வெறும் வயிற்றில் காலையில் சாப்பிட்டு வந்தால், நமது உடலில் உள்ள நச்சுக்கள், தீங்கு விளைவிக்கும் பாக்டீரியா, வைரஸ்கள் போன்ற அனைத்தையும் வெளியேற்றி, வயிற்றில் இருக்கும் புழுக்களையும் அழித்து விடுகிறது.

நமது சருமத்தில், பூஞ்சையால் ஏற்படக்கூடிய படர்தாமரை மற்றும் பாதப்படை போன்ற சரும தொற்றுக்களை குணப்படுத்த பூண்டில் உள்ள அஜோன் என்ற ரசாயனம் பெரிதும் உதவுகிறது.

பூண்டை நாம் பச்சையாக வெறும் வயிற்றில் சாப்பிடுவதால், அது நமது ரத்த நாளங்களை கட்டுப்படுத்தி, உயர் ரத்த அழுத்தம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து நம்மை பாதுகாக்கிறது.

பூண்டில் அழற்சி எதிர்ப்பி குணங்கள், டையாலில் சல்பைடு மற்றும் தியாக்ரெமோனோன் போன்ற தன்மைகள் அதிகமாக அடங்கியுள்ளது. எனவே நாம் பூண்டை உணவில் சேர்த்துக் கொள்வதால், நம் உடலில் ஏற்படும் அழற்சிகளை எதிர்த்து போராடி, அலர்ஜியால் ஏற்படும் ஒவ்வாமை போன்ற பிரச்சனைகளை தடுக்கிறது.

பூண்டில் அல்லில் சல்பைடு என்ற பொருள் இருப்பதால், பூண்டு புற்றுநோய் எதிர்ப்பியாக செயல்படுகிறது. எனவே பெண்கள் தங்கள் உணவில் பூண்டை சேர்த்துக் கொள்வதால், மார்பக புற்றுநோய் வராமல் தடுக்கிறது.

பூண்டு சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள்

பூண்டில் ஆர்கனோசல்பர் என்னும் கலவை இருப்பதால், இவை நமது உடலில் அதிகமாக துர்நாற்றத்தை ஏற்படுத்தி, மூச்சு விடுவதில் சிரமங்கள் போன்ற சுவாசப் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.

பூண்டு ஒருசிலரின் உடல் நிலைக்கு ஏற்றுக் கொள்வதில்லை. இதனால் அவர்களின் சருமத்தில், அலர்ஜி போன்ற ஒவ்வாமை பிரச்சனைகளை ஏற்படுத்தி, எரிச்சல், வயிற்றுப்போக்கு, குமட்டல், மற்றும் வாய்புண் போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது.

கர்ப்பிணி பெண்களுக்கு பூண்டு ஒரு பாதுகாப்பற்ற உணவாக உள்ளது. ஏனெனில் கர்ப்பிணி பெண்கள் பூண்டை அதிகமாக சாப்பிட்டு வந்தால், அவர்களின் பிரசவத்தின் போது, அதிகமான ரத்தப்போக்கு போன்ற பிரச்சனையை ஏற்படுத்துகிறது.

மருத்துகள் மற்றும் மாத்திரைகளை தினமும் சாப்பிட்டு வருபவர்கள், பூண்டை அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இல்லையெனில் அவர்களின் மருத்துவர்களின் ஆலோசனைகளை கேட்டு அதன்படி நடந்துக் கொள்ள வேண்டும்.

தீக்காயம் ஏற்பட்டவர்கள் பூண்டை தங்களின் உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்ள கூடாது. ஏனெனில் அவர்கள் பூண்டை அதிகமாக சாப்பிட்டால், உடம்பில் வீக்கம் போன்ற பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.

அதிக பூண்டை உணவில் சேர்த்துக் கொள்பவரா நீங்கள்?
அதிக பூண்டை உணவில் சேர்த்துக் கொள்பவரா நீங்கள்?

கல்லீரல் பாதிப்பு :

பூண்டில் அதிகப்படியான ஆண்ட்டிஆக்ஸிடண்ட் இருக்கிறது. இவற்றை அதிகமாக எடுக்கும் போது ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் அதிகம் சேர்ந்து கல்லீரல் பாதிப்படையும்.

நாற்றம் :

தொடர்ந்து பூண்டு சாப்பிட்டு வந்தால் கெட்ட நாற்றம் வரும். கெட்ட நாற்றம் ஒருவரின் தன்னம்பிக்கையையே குழைத்து விடும் ஆற்றல் உள்ளது .

நாற்றம் வந்தாலே நாம் சுத்தமாக இல்லை என்று அர்த்தமன்று மாறாக உணவில் இப்படியான பொருட்களை அதிகமாக சேர்த்திருப்பார்கள்.

பூண்டில் இருக்கும் வேதிப் பொருள் ரத்தத்தில் கலந்து வாயுவாக மாறும்போது இப்படியான நாற்றம் வெளிப்படும்.

நெஞ்செரிச்சல் :

தேசிய புற்றுநோய் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின்படி, பூண்டினையோ அல்லது பூண்டு அதிகமாக சேர்த்த உணவினை வெறும் வயிற்றில் உட்கொண்டால் அது வாந்தி மற்றும் நெஞ்செரிச்சலை ஏற்படுத்தும் என்கிறார்கள்.

இதே போல ஹார்வேர்ட் மெடிக்கல் ஸ்கூல் வெளியிட்ட ஆய்வறிக்கையின் படி,பூண்டினை தொடர்ந்து மிக அதிகமாக எடுத்துக் கொண்டால் அது புநுசுனு எனப்படுகிற பயளவசழநளழிhயபநயட சநகடரஒ னளைநயளந உண்டாகும்.

ரத்த ஓட்டம் :

மேரிலாண்ட் மெடிக்கல் செண்ட்டர் சமர்ப்பித்திருக்கும் ஆய்வறிக்கையின் படி பூண்டு ரத்தம் உறைதலை தாமதப்படுத்துகிறது. ஏதேனும் காயம் ஏற்ப்பட்டு ரத்தம் வந்தால் குறிப்பிட்ட நேரத்திற்குள் ரத்தம் வெளியேறுவது நிற்க வேண்டும். மாறாக தொடர்ந்து ரத்தம் வந்து கொண்டேயிருந்தால் அது ஆபத்து.

பூண்டு தொடர்ந்து எடுப்பதால் ரத்தம் உறையும் நேரம் அதிகரிக்கும் என்கிறார்கள். ரத்த ஓட்டத்திலும் மாற்றங்களை கொண்டு வரும். இதனால் ஏதேனும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளயிருப்பர்கள், அறுவை சிகிச்சைக்கு இரண்டு வாரங்களுக்கு முன்னரே பூண்டு அதிகமாக சேர்ப்பதை தவிர்த்திடுங்கள்.

சரும பாதிப்பு :

பூண்டில் இருக்கும் நுண்ணிய தாதுவான ஆலின் லயேஸ் சிலருக்கு சருமத்தில் அலர்ஜியை ஏற்படுத்தக்கூடியது. தொடர்ந்து இது உடலில் அதிகமாக சேரும் பட்சத்தில் சருமம் தொடர்பான பல்வேறு பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.

கண் பிரச்சனை :

நீங்கள் இதுவரை கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். மிக அதிகமாக பூண்டு உடலில் சேரும் போது அது ஹைப்ஹீமா(hலிhநஅய)என்கிற பாதிப்பை உண்டாக்கும். இதனால் கண்ணுக்கு உள்ளே இருக்கும் சேம்பரில் ரத்தக்கசிவு உண்டாகும்.

பூண்டில் இருக்கும் ஆண்டிகொயாகுலண்ட் தான் இதற்கு முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது.

இதற்கு உரிய சிகிச்சை எடுக்காமல் தொடர்ந்து பூண்டு சேர்த்து வந்தால் கண் பார்வையே பறிபோகும் அபாயமும் உள்ளது.

You might also like
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...