இறந்து நான்கு ஆண்டுகளின் பின்னர் ஆச்சரியத்தை ஏற்படுத்தி சீன தம்பதியினர்…

42

நான்கு ஆண்டுகளுக்கு முன்னதாக உயிரிழந்த சீன தம்பதியினர் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

சீனாவில் விபத்தில் இறந்து போன தம்பதியினரின் கருமுட்டை மூலம் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு குழந்தை பிறந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவைச் சேர்ந்த தம்பதியினர் 2013-ம் ஆண்டு கார் விபத்தில் உயிரிழந்தனர். மரணத்திற்கு பிறகு அவர்களின் கருமுட்டைகள் நான்ஜிங் மருத்துவமனையில் மைனஸ் 196 டிகிரியில் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், கருமுட்டைகளை வாடகைத்தாயின் கருவில் செலுத்தி வளரவைக்க விரும்பினர். லயோஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவரின் வயிற்றில் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த சீன தம்பதியின் கருமுட்டைகள் செலுத்தப்பட்டன. இதன் மூலம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஆண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தையை இறந்து போன சீன தம்பதியின் பெற்றோர்கள் வளர்க்கின்றனர். இறந்து போனவர்களின் கருமுட்டையிலிருந்து குழந்தை பெற்ற சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுபோன்று பல நாடுகளில் குழந்தைகள் பிறக்கின்றன. இதன் மூலம் குழந்தை இல்லாமல் இருக்கும் பலர் குழந்தை பாக்கியம் பெறுகின்றனர்.

You might also like
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...