பிரியா வாரியர் நடிக்கப் போகும் படம்

36

புருவ அசைவினால் கோடிக் கணக்கானவர்களின் இதயத்தை வென்றெடுத்த பிரியா வாரியார் நலன் குமாரசாமி இயக்கத்தில் படமென்றில் நடிக்க உள்ளார்.
ஒரு ஆடார் லவ் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகியிருக்கும் ப்ரியா வாரியரின் அடுத்த படம் குறித்து பல தகவல்கள் உலா வரும் நிலையில், ப்ரியா அடுத்ததாக நலன் குமாரசாமி இயக்கத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

ஒரு ஆடார் லவ் படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமாகிறார் ப்ரியா வாரியர். இந்த படத்தில் இருந்து வெளியான மாணிக்க மலராய பூவே பாடலின் மூலம் இந்திய அளவில் பிரபலமாகியிருக்கும் ப்ரியா வாரியரை தங்களது படத்தில் நடிக்க வைக்க பல இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் போட்டி போட்டுக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

அதேபோல் சூர்யாவின் அடுத்த படத்தை இயக்கும் கே.வி.ஆனந்தும், ப்ரியா வாரியரை தனது படத்தில் நாயகியாக்க பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியானது. ஆனால், கே.வி.ஆனந்த் அதனை மறுத்தார். அதேபோல் ரன்வீர் சிங் படமொன்றில் நடிக்கவும் ப்ரியா வாரியருக்கு அழைப்பு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ப்ரியா வாரியர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற சூது கவ்வும், காதலும் கடந்து போகும் படங்களை இயக்கிய நலன் குமாரசாமி இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

You might also like
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...