உலக அளவில் மக்களை கவர்ந்த பிரபலங்கள் யார் தெரியுமா?

23

உலக அளவில் மக்களின் மனதில் இடம்பிடித்த பிரபலங்கள் பற்றிய விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
சர்வதேச மக்களை கவர்ந்த பிரபலங்கள் பட்டியலில் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ், ஆலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி ஆகிய இருவரும் முதலிடம் பிடித்தனர்.
சர்வதேச அளவில் மக்களை கவர்ந்த பிரபலங்கள் பட்டியல் குறித்து ‘யூகோவ்’ என்ற நிறுவனம் ஆன்லைனில் வாக்கெடுப்பு நடத்தியது. 35 நாடுகளில் 37 ஆயிரம் பேரிடம் இந்த வாக்கெடுப்பு நடைபெற்றது.

இதன்மூலம் மக்களை கவர்ந்த 20 ஆண்கள் மற்றும் 20 பெண்கள் பட்டியலிடப்பட்டு அறிவிக்கப்பட்டனர்.
அவர்களில் ஆண்கள் பிரிவில் மைக்ரோசாப்ட் கம்ப்யூட்டர் நிறுவனர் பில்கேட்ஸ் முதலிடம் பிடித்தார். இதுவரை இவர்தான் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.

அவரைத் தொடர்ந்து அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா 2-வது இடத்திலும், நடிகர் ஜாக்கிஜான், சீன அதிபர் சி ஜின்பிங் ஆகியோர் முறையே 3-வது மற்றும் 4-வது இடத்திலும் உள்ளனர்.

பெண்கள் பிரிவில் ஆலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி முதலிடம் பிடித்து இருக்கிறார். அவருக்கு அடுத்தப்படியாக அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவின் மனைவி மிச்செலி ஒபாமா, மற்றும் ஒப்ரா, வின்பிரே ஆகியோர் முறையே 2-வது மற்றும் 3-வது இடம் பெற்றுள்ளனர்.

இவர்கள் தவிர கேளிக்கை மற்றும் பொழுது போக்குதுறையை சேர்ந்தவர்களான டெய்லர் சுவிப்ட், மடோனா, வியூ யிபே மற்றும் கால் கேடட் ஆகியோர் முறையே 4-வது 5-வது 6-வது மற்றும் 7-வது இடங்களை பிடித்துள்ளனர்.

இவர்களை தவிர அரசியல் பிரபலங்களான ஹிலாரி கிளிண்டன், ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்சுல் ஆகியோர் முதல் 10 இடங்களுக்குள் உள்ளனர். இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா 12-வது இடத்தை பிடித்துள்ளார். இவர் தற்போது ஆலிவுட் படங்களிலும், அமெரிக்க டி.வி. தொடரிலும் நடித்து பிரபலம் ஆகியுள்ளார்.

You might also like
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...