உடல் எடையை குறைக்க இந்த வழி உதவும்

75

உடல் எடையை குறைப்பதற்கு பல்வேறு வழிகளில் பலரும் முயற்சித்து வருகின்றனர், அந்த வகையில் இந்த எளிய வழிமுறையும் உடல் பருமணைக் குறைக்க உதவும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
உங்களுக்கு தெரியுமா நமது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதன் மூலமும் நமது உடல் எடை குறையுமாம். நச்சுக்களை வெளியேற்றும் செயல் மூலம் நமது உடலில் உள்ள மரணத்தை விளைவிக்கக்கூடிய பொருட்களை எளிதாக வெளியேற்றி விடலாம். எனவே இக்கட்டுரையில் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதற்கான ஒரு ட்ரிங் ரெசிபி கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உங்களது சீரண சக்தியை அதிகமாக்கி நச்சுக்களை சுத்தமாக வெளியேற்றி உடலில் தங்கியுள்ள கொழுப்பு செல்களையும் கரைத்து விடும்.

அதிகமான கொழுப்பு செல்கள் உடலில் இருப்பதும் டைப் 2 டயாபெட்டீஸ் வருவதற்கான வாய்ப்பாக கருதப்படுகிறது. தொப்பை ஏற்படுவதால் நிறைய நோய்களின் இருப்பிடமாக நமது உடல் மாறிவிடுகிறது. எனவே உங்கள் உடலை சுத்தமாக வைத்துக் கொண்டால் எந்த நோயும் உங்களை அண்டாது. உங்களது தொப்பையை குறைக்க வேண்டும் என நினைத்தால் இந்த பானத்தை இரவில் படுப்பதற்கு முன் குடித்தால் போதும் உடலில் உள்ள கொழுப்புகளை முழுமையாக கரைத்து விடும். இந்த இரவுப் பொழுது ட்ரிங் உங்கள் கொழுப்பை கரைப்பதோடு இதுவரை நீங்கள் பார்த்திராத அளவுக்கு நச்சுக்களையும் வெளியேற்றுகிறது.

தேவையான பொருட்கள் : 1 வெள்ளரிக்காய் 1/2

லெமன் 1 டேபிள் ஸ்பூன்

பார்சிலி 1/3 பங்கு தண்ணீர்

செய்முறை :

மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களை நன்றாக கலந்து மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும். எல்லா பொருட்களும் ஒன்றாக கலக்கும் வரை அரைக்கவும். பிறகு போதுமான தண்ணீர் கலந்து ட்ரிங் தயாரிக்கவும்.

இந்த ட்ரிங்கை தினமும் இரவில் படுப்பதற்கு முன் குடித்தால் நல்ல மாற்றத்தை காணலாம். இது ஒரு அற்புதமான பானமாகும். வழக்கமாக இதை பயன்படுத்தி வந்தால் உங்கள் தொப்பையை எளிதாக குறைத்து விடலாம்

தர்பூசணி

தர்பூசணி பழத்தில் வைட்டமின் ஏ, சி மற்றும் அமினோ அமிலம் அதிகம். தினமும் தர்பூசணி சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான நீர்ச்சத்து கிடைப்பது மட்டுமின்றி, வயிற்றில் இருக்கும் கொழுப்பை கரைத்து, உடல் எடையை குறைக்கவும் முடியும்.

பப்பாளி பழம்

கொழுப்பை கரைக்க உதவுவதில் ஓர் சிறந்த பழம் பப்பாளி. இதில் கொழுப்புச்சத்து மிகவும் குறைவு. உங்கள் டயட்டில் பப்பாளியை சேர்ப்பதால் விரைவாக கொழுப்பை குறைத்து, உடல் எடையில் நல்ல மாற்றம் காண முடியும்.

தக்காளி

கொழுப்பை எதிர்த்து போராடும் பழம் எனும் பெயர் பெற்றது தக்காளி. சரியான அளவு உங்கள் டயட்டில் தக்காளியை சேர்த்துக் கொள்வதால் தொப்பையை குறைக்க முடியும். இது அதிகப்படியான சோடியம், தண்ணீர், கொழுப்பை நீக்க உதவுகிறது.

காளான்

குடலியக்கத்தை சரியாக்கி, சீரான முறையில் இயங்க வைத்து, உடலில் இருக்கும் அதிகப்படியான கொழுப்பை அகற்ற உதவுகிறது காளான். இது, வயிற்றில் இருக்கும் கொழுப்பை குறைக்க பெருமளவில் உதவுகிறது.

பாதாம்

தினமும் பாதாம் சாப்பிடுவதால் வயிற்றில் இருக்கும் கொழுப்பை குறைக்க முடியும். இதில் இருக்கும் வைட்டமின் ஈ கொழுப்புச்சத்தை குறைக்க வெகுவாக உதவுகிறது.

ஓட்ஸ்

வயிற்றில் இருக்கும் கொழுப்பை குறைக்க உதவுவதில் ஓட்ஸ் ஓர் சிறந்த உணவாக இருக்கிறது. உங்களது காலை உணவில் ஓட்ஸ் சேர்த்துக் கொள்ளுங்கள், இதில் இருக்கும் நார்சத்து உடல் எடையை குறைக்கவும், அதிகமாக பசி எடுக்காமல் இருக்கவும் உதவுகிறது.

வாழைப்பழம்

வாழைப்பழம் உங்கள் செரிமனாத்தை வேகமடைய வைத்து உடல் எடையை குறைக்க உதவுகிறது. தினமும் வாழைப்பழம் சாப்பிடுவதால் உங்கள் வயிற்றில் இருக்கும் கொழுப்பை வேகமாக கரைக்க முடியுமாம்.

ஆப்பிள்

ஆப்பிளில் இருக்கும் நார்ச்சத்து உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தை தருவது மட்டுமின்றி, பசியை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. தினமும் ஆப்பிள் சாப்பிடுவதால் சீரான முறையில் உங்கள் உடல் எடையை குறைக்க முடியும்.

திராட்சை

திராட்சை உங்கள் பசியை குறைக்கும் மற்றுமொரு சிறந்த உணவாகும். திராட்சை ஜூஸ் குடித்து வந்தால் வயிற்றில் இருக்கும் கொழுப்பை வேகமாக குறைக்க முடியும். தொடர்ந்து நீங்கள் திராட்சை ஜூஸ் குடித்து வந்தால் 10 நாட்களில் 10 பவுண்ட் எடை வரை குறைக்க முடியுமாம்.

You might also like
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...