பாடலாசிரியர் விவேக்கை ஆச்சரியத்தில் ஆழ்த்திய மாஸ் ஹீரோ

25

தமிழகத்தின் உச்ச நட்சத்திர ஹீரோ, வளர்ந்து வரும் பாடலாசிரியர் விவேக்கை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
பலருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வரும் நடிகர் விஜய், தற்போது பாடலாசிரியரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறார்.

‘36 வயதினிலே’ படத்தில் இடம் பெற்ற ‘வாடி ராசாத்தி…’ என்ற பாடல் மூலம் புகழ் பெற்றவர் பாடலாசிரியர் விவேக். இப்படத்தை அடுத்து, ‘இறுதிச்சுற்று’, ‘இறைவி’ படங்களுக்கு பாடல் எழுதினார். ‘ஒரு நாள் கூத்து’ படத்தில் இடம் பெற்ற ‘அடியே அழகே…’ பாடல் பலருடைய கவனத்தையும் ஈர்த்தது.

இப்படங்களைத் தவிர பல சூப்பர் ஹிட் படங்களுக்கு பாடல் எழுதியுள்ளார். இவர் விஜய் நடிப்பில் வெளியான ‘மெர்சல்’ படத்தின் அனைத்து பாடல்களையும் எழுதியுள்ளார். இதில் இடம் பெற்ற ‘ஆளப்போறான் தமிழன்…’ என்ற பாடல் மட்டும் பல சாதனைகளை படைத்துள்ளது. இது விஜய் ரசிகர்கள் மட்டுமில்லாமல், அனைத்து தரப்பினரையும் முனுமுனுக்க வைத்தது.

இன்று பாடலாசிரியர் விவேக் தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு திரையுலகினர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், விஜய் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறியிருக்கிறார். இது குறித்து விவேக் கூறும்போது, ‘தளபதி எனக்கு வாழ்த்து கூறி ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். மிகவும் இனிமையானவர். அவருடைய வார்த்தைகள் பொக்கிஷமானவை. என்னுடைய பிறந்த நாளை சிறப்படைய வைத்திருக்கிறார்’ என்று கூறியிருக்கிறார்.

You might also like
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...