வித்தியாசமான வழியில் விக்ரமிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய திரைப்படக்குழு

25

வித்தியாசமான வழியில் நடிகர் சியான் விக்ரமிற்கு சாமி 2 திரைப்படக்குழுவினர் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஹரி இயக்கத்தில் விக்ரம் சாமி ஸ்கொயர் படத்தில் நடித்து வரும் நிலையில், அவரது பிறந்த நாளான இன்று சாமி பயங்கரமானவர் தான், ஆனால் சியான் இனிமையானவர் என்று விக்ரமுக்கு சாமி-2 படக்குழு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளது. சூளுயயஅல2
நடிகர் விக்ரம், திரிஷா நடிப்பில் 2003-ம் ஆண்டு வெளியான சாமி படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இயக்குனர் ஹரி இயக்கிய இந்த படத்தின் இரண்டாவது பாகம் ஹசாமி ஸ்கொயர்’ என்ற பெயரில் தற்போது உருவாகி வருகிறது.

இதில் விக்ரம் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு 80 சதவீதம் முடிந்துள்ளத நிலையில், படஅதிபர்கள் போராட்டத்தால் படப்பிடிப்பு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில், விக்ரம் தனது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக படத்தில் இருந்து மாஸான புகைப்படம் ஒன்றை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்தை படக்குழு தெரிவித்துள்ளது. அதில் சாமி பயங்கரமானவர் தான், ஆனால் சியான் இனிமையானவர், ஸ்டிரைக்கால் அவரது ரசிகர்களுக்காக சிறப்பு விருந்து எதுவும் அளிக்க முடியவில்லை. என்று குறிப்பிட்டுள்ளது.

சாமி ஸ்கொயர் படத்தில் விக்ரம் அப்பா, மகன் என இரு கதாபாத்திரங்களில் நடிக்கிறார். சாமி படத்தில் வில்லனாக நடித்த கோட்டா சீனிவாச ராவ்வின் மகனாக, பாபி சிம்ஹா இந்த படத்தில் வில்லனாக நடித்து வருகிறார்.

தமீன்ஸ் பிலிம்ஸ் சார்பில் சிபு தமீன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்னு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

You might also like
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...