பித்த வெடிப்பினை தடுப்பதற்கு இதோ சில எளிய வழிகள்

32

சில காரணங்களினால் எமது சருமம் வெடிக்கின்ற நிலைமை ஏற்படுகின்றது. இவ்வாறு சருமம் வெடிப்பதனை நாம் பித்த வெடிப்பு என்னும் அழைக்கின்றோம்.
இறந்த செல்கள், கொழுப்பு படிவங்கள், அதிக வறட்சி எல்லாம் ஒன்று சேர்ந்து தரும் அழுத்தத்தால் சருமம் வெடித்து விடுகின்றது.
நமக்கு அருகில், எளிதில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான, பக்கவிளைவில்லாத மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், ஆண், பெண் என இருபாலருக்கும் ஏற்படும் பாதவெடிப்பு பிரச்னைக்கான மருத்துவத்தை பார்க்கலாம். இப்பிரச்னைக்கு குப்பைமேனி, மஞ்சள்பொடி, இஞ்சி ஆகியவை மருந்தாகிறது. பாத வெடிப்பால் ரத்தக்கசிவு ஏற்படும். வெடிப்பில் தூசி புகுந்து துன்புறுத்தும். வலியை ஏற்படுத்தும்.
பித்தத்தை சமன்படுத்தும், பாதவெடிப்பை சரிசெய்யும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: இஞ்சி, சீரகம், தனியா, பனங்கற்கண்டு. செய்முறை: இஞ்சி ஒரு துண்டு நசுக்கி போடவும். இதனுடன் ஒரு ஸ்பூன் சீரகம், ஒரு ஸ்பூன் தனியா, சிறிது பனங்கற்கண்டு சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். வடிக்கட்டி இந்த தேனீரை குடித்துவர ரத்தத்தை சீர்செய்யும். பித்தம் அதிகமாக சுரப்பதை தடுத்து பித்தசமனியாக விளங்குகிறது. பசியை முறைப்படுத்துகிறது. தோல் ஆரோக்கியம் பெற்று வெடிப்புகள் விலகிபோகும்.

குப்பைமேனியை பயன்படுத்தி பாதவெடிப்புக்கான மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: குப்பைமேனி, விளக்கெண்ணெய், மஞ்சள் பொடி. ஒரு பாத்திரத்தில் சிறிது விளக்கெண்ணெய் எடுக்கவும். இதனுடன் மஞ்சள் பொடி, குப்பைமேனி இலை பசையை சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சி எடுத்து வைத்துக்கொண்டு இரவு நேரத்தில் தூங்க செல்லும் முன்பு பூசிவர பாதவெடிப்பு சரியாகும். பாதம் அழகுபெறும். குப்பைமேனி உடலை பொலிவுபெற செய்ய கூடியது. நுண்கிருமிகள், பூஞ்சை காளான்களைஅழிக்கும்.

அத்திமரப்பட்டை, புங்கமரப்பட்டையை பயன்படுத்தி பாதவெடிப்புக்கான மருந்து தயாரிக்கலாம். அத்திமரப்பட்டை, புங்கமரப்பட்டை ஆகியவற்றை துண்டுகளாக்கி வெயிலில் காயவைத்து பொடியாக்கி எடுக்கவும். இதனுடன் சிறிது மஞ்சள், புங்க எண்ணெய் சேர்த்து கலந்து பூசிவர பாதவெடிப்பு சரியாகும்.

பட்டைகள் பச்சையாக இருக்கும்போது இடித்து பசையாக்கி பாதவெடிப்பு உள்ள இடத்தில் கட்டிவைத்தால் வெடிப்பு சரியாகும். சாலையோரங்களில் வெயிலுக்காக வைத்து வளர்க்கப்படும் மரம் புங்கன். இது மருத்துவ குணங்களை உடையது.அத்தி மரத்தின் பாகங்கள் பல்வேறு நன்மைகளை கொண்டவை. அத்தி பழம் உணவாக பயன்படுகிறது. அத்தி பால் மருந்தாகிறது. அத்திமரப்பட்டை பாதவெடிப்பை சரிசெய்கிறது.

மஞ்சள் பொடியுடன் சிறிது சுண்ணாம்பு, விளக்கெண்ணெய் சேர்த்து கலந்து பாதவெடிப்பு உள்ள இடத்தில் இரவு நேரத்தில் நன்றாக அழுத்தி தேய்த்து காலையில் கழுவிவர பாதவெடிப்பு சரியாகும். வெடிப்பு மாறி தோல் மென்மையாகிறது. பாதம் அழகு பெறும். சுண்ணாம்பு பாதவெடிப்புக்கு மருந்தாகிறது. பாதவெடிப்புகான இந்த மருந்துகளை பயன்படுத்தும் முன்பு இளம்சூட்டில் பாதங்களை நன்றாக கழுவ வேண்டும்.

இதையடுத்து மேல்பூச்சு மருந்துகளை போடும்போது நல்ல பலன் தரும்.பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்போக்கு பிரச்னையை தீர்க்கும் மருத்துவத்தை பார்க்கலாம். அதிக உஷ்ணத்தால் வெள்ளைப்போக்கு ஏற்படுகிறது. இதனால் இடுப்பு வலி, அடி வயிற்று வலி, உடல் சோர்வு போன்றவை ஏற்படும். இப்பிரச்னைக்கு அத்திக்காய் அற்புதமான மருந்தாக பயன்படுகிறது. துவர்ப்பு சுவை உடைய அத்தியில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. நோயை விலக்க கூடியது. அத்திக்காயை எடுத்து நன்கு அரைத்து மோரில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் சில நாட்கள் குடித்துவர வெள்ளைப் போக்கு பிரச்னை சரியாகும்.

பாட்டி வைத்தியங்கள்
பாட்டி வைத்தியங்கள்

எலுமிச்சை மற்றும் கிளிசரின் :

தேவையானவை :

எலுமிச்சை சாறு- 1

கிளிசரின் – 2 ஸ்பூன்

ரோஸ் வாட்டர் – 3 ஸ்பூன்

செய்முறை :

இவை எல்லாவற்றையும் ஒன்றோன்று கலந்து கொள்ளுங்கள். ஃப்ரெஷாக செய்து பயன்படுத்தினல நல்ல பலன் தரும்.

பயன்படுத்தும் முறை :

இரவில் தூங்குவதற்கு முன் கால்களை நன்றாக கழுவிக் கொண்டு பின்னர் இந்த கலவையை பாதங்களில் தடவுங்கள். இவ்வாறு செய்தால் ஒரு சில நடகளிலேயே வெடிப்பு மறைந்து விடும்.

சமையல் சோடா மற்றும் தேங்காய் எண்ணெய் :

தேவையானவை :

தேங்காய் எண்ணெய்- 2 ஸ்பூன்

சமையல் சோடா – 1 1/2 ஸ்பூன்

தயாரிக்கும் முறை :

இரண்டையும் பேஸ்ட் போல் ஆகும் வரை நன்றாக கலக்கிக் கொள்ளுங்கள். தேங்கய எண்ணெய் செக்கு எண்ணெயாக இருந்தால் விரைவில் பலன் கிடைக்கும்

பயன்படுத்தும் முறை :

இந்த பேஸ்டை பாதங்களில் தடவி மசாஜ் சிறிது நேரம் செய்யுங்கள். அரை மணி நேரம் கழித்து காலை கழுவிக் கொள்ளலாம்.

வாழைப்பழம் மற்றும் அவகாடோ :

வாழைப்பழம் – 1

அவகாடோ- 1/2 பழம்

ஆலிவ் எண்ணெய் – 1 ஸ்பூன்.

தயாரிக்கும் முறை :

முதலில் வாழைப்பழம் மற்றும் அவகாடோவை நன்றாக மசித்து ப்யூரி போல் செய்து கொண்டு அவற்றுடன் ஆலிவ் எண்ணெய் கலந்து கொள்ளுங்கள்.

பயன்படுத்தும் முறை :

இந்த பேஸ்டை பாதங்களில் தடவி 30 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். இரவு தூங்குவதற்கு முன் இப்படி செய்து பின்னர் கழுவலாம். நல்ல பலன் தரும்.

ஓட்ஸ் மற்றும் தேன் :

தேவையானவை :

ஓட்ஸ் – 2 ஸ்பூன்

தேன்- 2 ஸ்பூன்

தயாரிக்கும் முறை :

ஓட்ஸை பொடித்துக் கொள்ளுங்கள். இதனுடன் தேன் கலந்து கெட்டியாக இருந்தால் சிறிது ரோஸ் வாட்டரை கலந்து கொள்ள வேண்டும்.

பயன்படுத்தும் முறை :

இதனை கால்களில் ஸ்க்ரப் போல் தேய்த்து 15 நிமிடங்கள் அப்படியே இருங்கள். இப்படி வாரம் 3 முறை செய்தால் நல்ல பலன் தரும்.

மெழுகு :

இந்த குறிப்பு மிகவும் அருமையான பலனைத் தரும். கடைகளில் வாங்கும் க்ரீமை விட பாதுகாப்பானது. உங்கள் பாதங்கள் மிருதுவாகும்.

தேவையானவை :

வெள்ளை மெழுகுவர்த்தி

விளக்கெண்ணெய்

தயாரிக்கும் முறை :

மெழுகுவர்த்தியிலிருக்கும் மெழுகை உதிர்த்து பொடி செய்து கொள்ளுங்கள். பின்னர் விளக்கெண்ணெயை சூடுபடுத்தி அதில் மெழுகை போடவும். அடுப்பிலிருந்து சற்று தூரமாகவே எண்ணெய் கரண்டியை பிடித்துக் கொள்ளுங்கள். மெழுகு முழுவதும் உருகியதும், அதனை ஆற விட வேண்டும்.

பயன்படுத்தும் முறை :

ஆறியதும் அது களிம்பு போல் மாறிவிடும். அதனை தினமும் இரவில் தடவிக் கொண்டு தூங்குங்கள். 3 நாட்களில் உங்கள் கால்களில் இருக்கும் வெடிப்பெல்லாம் மறைந்து மிருதுவான கால்களாய் காட்சியளிக்கும். கியாரெண்டி.

வாசலின் :

இதுவும் மிக எளிதான குறிப்பு. வாசலினில் இருக்கும் பெட்ரோலியம் ஜெல்லி பாதங்களில் இருக்கும் வெடிப்பை போக்கும். மிருதுவான தன்மையை தடும்.

தேவையானவை :

வாசலின் – 1 ஸ்பூன்

எலுமிச்சை சாறு- அரை ஸ்பூன்

செய்முறை :

வாசலின் ஸ்பூன் அளவு எடுத்து அதனுடன் எலுமிச்சை சாறு கலந்து கொள்ளுங்கள். அதனை பாதங்களில் த்டவி மசாஜ் செய்யவும். அரை மணி நேரம் கழித்து பாதங்களை கழுவலாம் அல்லது பாதங்களை இரவு முழுவதும் அப்படியே வைத்திருக்கலாம்.

அரிசி மாவு ஸ்கர்ப் :

இதனை வாரம் இருமுறை செய்தால் போதும். உங்கள் பாதங்களில் வெடிப்பு வராமல் தடுக்கும். இறந்த செல்களை நீக்கி பாதங்களை பட்டு போல் வைத்திருக்க உதவும்.

தேவையானவை :

அரிசி மாவு- 1 ஸ்பூன்

தேன்- 1 ஸ்பூன்

ஆப்பிள் சைடர் வினிகர் – 1 ஸ்பூன்

செய்முறை :

அரிசி மாவில் சிறிது நீர் சேர்த்து பேஸ்ட் போல் செய்து கொள்ளுங்கள். பின் மற்றவற்றையும் ஒன்றன்பின் ஒன்றாக கலந்து கொள்ளுங்கள்.

பயன்படுத்தும் முறை :

இந்த ஸ்க்ரப்பை குளிப்பதற்கு முன் பாதங்களில் தடவி தேய்க்க வேண்டும். 5 நிமிடம் கழித்து கழுவலாம்.. வாரம் இருமுறை செய்தால் பாதவெடிப்பை வராமல் காத்திட முடியும் .

You might also like
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...