காலா பட டீசர் புதிய சாதனை படைத்துள்ளது

29

சுப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில், தனுஷ் தயாரிப்பில், பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘காலா’ படத்தின் டீசர் யூடியூப்பில் புதிய சாதனை படைத்துள்ளது.
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘காலா’. பா.இரஞ்சித் இயக்கியுள்ள இந்த படத்தை தனுஷ் தயாரித்திருக்கிறார். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் டீசர் மார்ச் 1ம் தேதி வெளியிடப்பட்டது. இந்த டீசரை 2 கோடியே 41 லட்சத்திற்கும் மேலாக ரசிகர்கள் இதுவரை பார்த்துள்ளனர்.

இந்நிலையில், இந்த டீசரை லைக் செய்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை எட்டி புதிய சாதனை படைத்துள்ளது. இப்படம் ஏப்ரல் 27ம் தேதி ‘காலா’ ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பட அதிபர்கள் போராட்டத்தால் ரிலீஸ் தேதி தள்ளிப்போக வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியானது.

தற்போது ‘காலா’ வருகிற ஜூன் 7-ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ரஜினியுடன் நானா படேகர், சமுத்திரக்கனி, சம்பத், ரவி கேளா, சாயாஜி ஷிண்டே, பங்கஜ் த்ரிபாதி, மிகி மகிஜா, மேஜர் பிக்ரம்ஜித், அருள்தாஸ், சுதன்ஷ_ பாண்டே, அரவிந்த் ஆகாஷ், ‘வத்திகுச்சி’ திலீபன், ரமேஷ் திலக், மணிகண்டன், {ஹமா குரேஷி, அஞ்சலி பட்டேல், அருந்ததி, சாக்ஷி அகர்வால், நிதிஷ், வேலு, ஜெயபெருமாள், கருப்பு நம்பியார், யதின் கார்கேயர், ராஜ் மதன், சுகன்யா என ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...