காமெடி படத்தில் நடிக்கும் நயன்தரா?

31

பிரபல நடச்த்திர ஹீரோயினான நயன்தாரா காமெடி படமொன்றில் நடிக்க உள்ளார்.
பொதுவாக நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வரும் நயன்தாரா, அடுத்ததாக கேங்ஸ்டர் காமெடி படத்தில் நடிக்க இருக்கிறார்.

தென்னக திரை உலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள் இவரைத் தேடி வருகின்றன.

நிவின்பாலி நாயகனாக நடிக்கும் ‘லவ் ஆக்ஷன் டிராமா’ மலையாள படத்தில், நிவின்பாலியுடன் நாயகியாக நயன்தாரா நடிக்கிறார். இந்த படம் மே மாதம் தொடங்க இருக்கிறது. இதன் டி.வி. உரிமை இப்போதே பெரிய தொகைக்கு விற்கப்பட்டுவிட்டது.
அடுத்து, நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள ‘கோட்டயம் குர்பானா’ மலையாள படத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்கிறார். கதாசிரியர் ஆர்.உன்னி எழுதியுள்ள இந்த படம் வேடிக்கை கொண்டாட்டம் என்று கலகலப்பாக அமையும் என்று கூறப்படுகிறது. இதில் நயன்தாராவுக்கு படம் முழுவதும் காமெடியில் கலக்கும் வேடம்.
சமீப காலங்களில் எந்த நாயகி பாத்திரத்திலும் பார்க்காத அளவுக்கு கேங்ஸ்டர் காமெடி படமாக இது இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...