அதர்வா திரைப்படத்தில் நடிக்கும் பிரபலம்

37

ஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா நடிப்பில் உருவாகி வரும் பூமராங் படத்தில் தேசிய விருது இயக்குநர் மகேந்திரன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

கவுதம் கார்த்திக் நடிப்பில் வெளியான ‘இவன் தந்திரன்’ படத்தை இயக்கிய ஆர்.கண்ணன் அடுத்ததாக இயக்கி வரும் படம் பூமராங். அதர்வா நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார்.

ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ், சுஹாஷினி மணிரத்னம் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். வில்லனாக பாலிவுட் நடிகர் உபேன் படேல் நடிக்கிறார். ரதன் இசையமைக்கும் இந்த படத்திற்கு பிரசன்னா.எஸ்.குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் சிறப்பு தோற்த்தில் இயக்குநரும், நடிகருமான மகேந்திரன் நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மகேந்திரன் சமீப காலமாக நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் கடைசியாக நிமிர் படத்தில் உதயநிதியின் அப்பாவாக நடித்திருந்தார். இந்த படத்தில் அவரது கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில், அவர் அடுத்ததாக மிஸ்டர்.சந்திரமௌலி படத்தில் நடித்திருக்கிறார்.

You might also like
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...