09-05-2018 புதன்கிழமை – இன்றைய ராசிபலன்கள்

50

09-05-2018 புதன் கிழமை
விளம்பி வருடம் சித்திரை 26
இன்று தேய்பிறை

இராகுகாலம் : 11:54- 1:24 வரை
நல்ல நேரம் : 4:25- 5:54 வரை
எமகண்டம் ; 7:24 – 8:54. வரை
குளிகண் : 10:24. – 11:54

மேஷம்:


நண்பரின் ஆலோசனையை ஏற்று முன்னேறுவீர்கள். குடும்பத்தினரின் தேவையறிந்து நிறைவேற்றுவீர்கள். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு நிறைவேறும். லாபம் உயரும். பெண்கள் ஆடம்பர நோக்கில் செயல்படுவர்.

ரிஷபம்:


பிறரது விமர்சனத்தைப் பொருட்படுத்த மாட்டீர்கள். முக்கிய செயல்களை ஆர்வமுடன் நிறைவேற்றுவீர்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த இடையூறு விலகும். பணவரவும் நன்மையும் அதிகரிக்கும். புதிய வாகனம் வாங்க அனுகூலம் உண்டு

மிதுனம்:


மற்றவர் தேவையறிந்து நிறைவேற்றுவீர்கள். தொழில், வியாபாரத்தில் லாபம் மிதமாக இருக்கும். பணியாளர்கள் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வீடு, வாகன வகையில் மராமத்துச் செலவு ஏற்படும். மாணவர்கள் அக்கறையுடன் படிப்பர்.

கடகம்:


எதிர்பார்ப்புடன் சிலர் நெருங்கி வருவர். கூடுதல் உழைப்பு தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி நிலையை உருவாக்கும். வருமானம் அளவாக இருக்கும். ஒவ்வாத உணவை தவிர்க்கவும். சுபவிஷயத்தில் உறவினர் ஒத்துழைப்பர்.

சிம்மம் :


சூழ்நிலை அறிந்து செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் ஆதாயம் மிதமாக இருக்கும். பணியாளர்கள் விண்ணப்பித்த கடனுதவி கிடைக்க வாய்ப்புண்டு. வாகனப் பயணத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

கன்னி:


உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு நிறைவேறும். தாராள பணவரவு கிடைக்கும். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர். அரசு வகையில் உதவி கிடைக்க வாய்ப்புண்டு.

துலாம்:


மற்றவர் விமர்சனத்தால் வருத்தம் தரலாம். தொழில் வியாபாரத்தில் இருக்கிற நன்மையைப் பாதுகாப்பது நல்லது. லாபம் சுமாராக இருக்கும். ெவளியூர் பயணத்தில் திடீர் மாறுதல் உண்டாகும். மாணவர்கள் பாதுகாப்பு குறைந்த இடங்களில் செல்ல வேண்டாம்.

விருச்சிகம் :


உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். லட்சியம் எளிதில் நிறைவேறும். தொழில், வியாபார வளர்ச்சியால் லாபம் அதிரிக்கும். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர். பிள்ளைகளின் செயல்பாடு பெருமையளிக்கும்.

தனுசு:


குடும்ப விஷயம் பிறரிடம் பேச வேண்டாம். தொழில் வியாபாரத்தில் இருக்கிற அனுகூலம் பாதுகாக்கவும். பெண்களுக்கு செலவுக்கான பணத்தேவை அதிகரிக்கும். பிராணிகளிடம் இருந்து விலகவும். மாணவர்கள் அக்கறையுடன் படிப்பர்.

மகரம்:

குடும்ப பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி இலக்கு நிறைவேறும். அதிக பணவரவுடன் நிலுவைப் பணமும் வசூலாகும். நண்பருக்கு தேவையான உதவி செய்வீர்கள். பெண்கள் இஷ்ட தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவர்.

கும்பம்:


நண்பருக்கு கடனாக கொடுத்த பணம் கிடைக்கும். தெய்வ அருளால் சுபவிஷயத்தில் நல்ல முடிவு கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் வருமானம் உயரும். புத்திரர் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். பெண்கள் விருந்து விழாவில் பங்கேற்பர்.

மீனம்:


மனதில் தன்னம்பிக்கை மேலோங்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பணியாளர்கள் பணிச்சுமையை சந்தித்தாலும் வருமானம் கூடும். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்க வாய்ப்புண்டு.

You might also like
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...