வெங்காய சட்னி கசக்காமல் இருக்க வேண்டுமா ? மேலும் பல குட்டி குட்டி சமையல் டிப்ஸ்

1.பவுடர் மற்றும் ரசம் பவுடர் எப்போதும் புதியதாக மணம் மாறாமல்
இருக்கவேண்டுமா? சாம்பார் பவுடர் மற்றும் ரசம் பவுடர் பாக்கெட்டுகளை
பிரிஜ்ஜின் பிரீஸரில் வைத்து உபயோகிங்கள். மணம் மாறாமல் இருக்கும்.

2.வெங்காய சட்னி கசக்காமல் இருக்க வேண்டுமா? வெங்காயத்தை சிறிது எண்ணெய் விட்டு வதக்கியபின் அரையுங்கள். சட்னி கசக்காமல் ருசிக்கும்.

3.கேரட்டின் தலைபகுதியை சிறிது நறுக்கி விட்டு காற்று புகாத பாலிதின்
பைகளில் போட்டுவைங்கள். நீண்ட நாட்களுக்கு கேரட் பசுமையாக உலராமல் இருக்கும்

4.பச்சை மிளகாயின் காம்பினைக் கிள்ளிவிட்டு காற்று புகாத பாலிதின்
பைகளில் போட்டு வைத்தால் நீண்ட நாட்களுக்கு பசுமை மாறாமல் இருக்கும்.

5.*பசலைக்கீரை மற்றும் பச்சை காய்கறி, கீரைவகைகளைச் சமைக்கும் போது சிறிது
சர்க்கரை சேர்த்து சமையுங்கள். சமைத்த பின்னும் அவற்றின் பச்சை நிறம் மாறாமல் இருக்கும்

You might also like
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...