தேங்காய் திருவும் பொழுது ஓட்டை திருகாதீர்கள் குடல் புண் உண்டாகும் – மேலும் பல சமையல் குறிப்புகள்!

1. பச்சை மிளகாயின் காம்பினைக் கிள்ளிவிட்டு காற்று புகாத பாலிதின்
பைகளில் போட்டு வைத்தால் நீண்ட நாட்களுக்கு பசுமை மாறாமல் இருக்கும்.

2.பசலைக்கீரை மற்றும் பச்சை காய்கறி, கீரைவகைகளைச் சமைக்கும் போது சிறிது
சர்க்கரை சேர்த்து சமையுங்கள். சமைத்த பின்னும் அவற்றின் பச்சை நிறம் மாறாமல் இருக்கும்

3.மாவு டப்பாக்களில் பிரியாணி இலையை போட்டு வையுங்கள். மாவு ஈரமாகாமலும் கட்டி விழாமலும் இருக்கும்.

4.கேக் முட்டை வாடையடிக்கிறதா?கவலையை விடுங்கள். கேக்கிற்கு மாவு பிசையும் போது ஒரு மேஜைக்கரடி தேன் சேர்த்து பிசைந்து பாருங்கள் கேக் முட்டை வாடை போயே போச்சி !

5.முட்டைக்கோஸ், காலிபிளவர் போன்றவைகளை வேக வைக்கும் பொழுது ஒரு சொட்டு எலுமிச்சை சாறு ஊத்தி வேக வைத்தால் வேண்டாத வாசம் போய் விடும்.

6.தேங்காய் துருவும் பொழுது ஓட்டையும் சேர்த்து துருவி பயன்படுத்தினால் குடல் புண் உண்டாகும். அதனால் வெள்ளைப் பகுதியை மட்டும் பயன்படுத்தவும்.

7.மிளகாய் வத்தலை வறுக்கும் பொழுது சிறிது உப்பு சேர்த்து வறுத்தால் ஹச்…… ஊச்……… என்று தும்மல் ஏற்பட்டு பாடாய்படுத்தாது.

8.வடகத்தை வெறும் வாணலியில் வறுத்த பின் எண்ணெயில் வறுத்தால் நன்றாக பொரிந்து மொறு, மொறுப்பாக இருக்கும்.

9.வேப்பம் பூவை நெய்யில் வறுத்து சிறிது உப்பு சேர்த்து சாதத்தில் பிசைந்து பயன்படுத்தினால் ஜுரம், வரவே வராது.வேப்பம்பூ கடைகளில் கிடைக்கிறது.

You might also like
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...