புதிய காதை உருவாக்கி மருத்துவ உலகில் விந்தை புரிந்த அமெரிக்க டாக்டர்கள்

27

அமெரிக்காவில் விபத்தில் காது ஒன்றை இழந்த பெண் ராணுவ சிப்பாக்கு புதிய காதை பொருத்தி டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்.
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த பெண் ஷாமிகா புர்ராஜ்(21). இவர் ராணுவத்தில் வீரராக பணிபுரிகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மிஸ்சிசிப்பியில் இருந்து போர்ட் பிலிஸ்நகருக்கு காரில் பயணம் செய்தார்

அப்போது முன்புற டயர் வெடித்தது. இதனால் கார் 700 அடி தூரம் பல தடவை உருண்டு கடும் விபத்துக்குள்ளானது. இதனால் வெளியே தூக்கி வீசப்பட்ட ஷாமிகா புர்ராஜ் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

தண்டுவடத்தில் முறிவு ஏற்பட்டது. அவரது இடதுபுற காது முழுவதும் சேதமடைந்து அழிந்தது. இந்தநிலையில் அவர் டெக்சாஸ் எல்பாசோவில் உள்ள வில்லியம் பியூமண்ட் ராணுவ மருத்துவ மையத்தில் சிகிச்சை பெற்றார். அங்கு அவருக்கு மீண்டும் காது பொருத்த பிளாஸ்டிக் சர்ஜரி டாக்டர்களால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

முதலில் அவரது உடலிலேயே புதிதாக காது வளர்க்கப்பட்டது. அவரது விலாவில் குறுத்தெலும்பு எடுக்கப்பட்டு அதில் புதிய ரத்த நாளங்கள் உருவாக்கப்பட்டது. பின்னர் அது ஷாமிகா புர்ராஜின் முழங்கையில் காதுபோன்ற வடிவில் வளர்க்கப்பட்டது.

அது முழுமையாக வளர்ச்சி அடைந்த பின் முழங்கையில் இருந்து அகற்றப்பட்டு ஷாமிகாவின் இடதுபுற காது பகுதியில் பொருத்தப்பட்டது. இந்த தகவலை டெக்சாஸ் எல் பாசோ ராணுவ ஆஸ்பத்திரியின் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஓவன் ஜான்சன் தெரிவித்தார்.

You might also like
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...