தீட்டு என்றால் என்ன ? வாங்க பார்க்கலாம் சுவாரஸ்யமான தகவல் !

264

“தீட்டு” என்கிற சொல் புரிந்துகொள்ளப்படாமலேயே காலங்காலமாக பெரும்பாலானோரால் கையாளப்பட்டு வருகிறது. இது குறித்த உண்மையான அர்த்தமுள்ள பார்வை அனைவருக்கும் தேவை. இறைவழிபாட்டில் விலக்க வேண்டிய தீட்டுக்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்

தீட்டு என்பது என்ன?

இறைவன் இருக்கும் இடத்தில் இந்தத் தீட்டுகள் ஆகாது!தீட்டு என்பது, தீண்டத் தகாததைத் தீண்டுவது.

தீட்டுடன் இறைவனைக் கும்பிட்டால், இறைவன் ஏற்கமாட்டான் என்பார்கள்.

தீட்டுப் பட்டால் துடைத்து விடும், தீட்டுக் கூடாது என்பார்கள்.

ஆண், பெண் கலந்தாலும் தீட்டு, குழந்தைகள் பிறந்தாலும் தீட்டு,
பெண்கள் மாதவிடாயும் தீட்டு,
இறந்தாலும் தீட்டு!
இப்படிப் பார்த்தால், தீட்டில் உருவான நமது உடலே ஒரு தீட்டு தானே! அதனால் தான் இறந்த பிறகு உடலைப் பிணம் என்று பெயர் வைத்துப் பிணத்தைத் தொட்டால் தீட்டு என்பார்கள்.

தீட்டுடைய இந்த உடலை வைத்து, எப்படிக் கடவுளை வழிபட முடியும்?
சிந்தித்துப் பாருங்கள்.
இதுவல்ல உண்மையான தீட்டு.

இவை நாம் சுகாதாரமாய் இருப்பதற்கு, இறைவனை பெயரைச் சொல்லி ஏற்படுத்திய ஒழுக்கங்கள். அப்பொழுதுதான் பயபக்தியோடு சுத்தமாக இருப்போம் என்பதற்காகத்தான் இவற்றைச் சொன்னார்கள்.

உண்மையில் தீட்டு என்பன பின்வருவன மட்டுமே !

காமம்,
குரோதம்,
லோபம்,
மதம்,
மாற்சரியம்
என்னும் பஞ்சமா பாதங்கள்!

You might also like
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...