ச்சீ ச்சீ காதலிலும் லஞ்சமா?

27

சீனாவில் காதலை பிரேக் அப் செய்து கொள்வதற்காக காதலிக்கு 4 கோடிக்கு மேல் பணம் கொடுக்க சூட்கேஸ் நிறைய பணம் கொண்டு வந்த காதலனை பொலிசார் கையும் களவுமாக பிடித்துள்ளனர்.

சீனாவின் ஹன்ங்ஜே பகுதியில் உள்ள மதுபான விடுதிக்கு கடந்த திங்கட் கிழமை இரவு காதல் ஜோடிகள் வந்துள்ளனர். அப்போது காதலன் மிகப் பெரிய சூட்கேஸ் கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.

அதில் கட்டு கட்டாக பணம் இருந்துள்ளது. சுமார் 2 மில்லியன் யுவான் (இலங்கை மதிப்பு 4 கோடிக்கு மேல்) இருந்ததைக் கண்ட மதுபான விடுதி ஊழியர்கள் சந்தேகப்பட்டு பொலிசாருக்கு உடனடியாக தகவல் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் இருவரையும் பிடித்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அப்போது காதலனிடம் பொலிசார் விசாரணை மேற்கொண்ட போது தங்களுடைய காதலின் பிரிவிற்காக சுமார் 2 மில்லியன் யுவான் கொண்டு வந்ததாக கூறியுள்ளார்.

அதே சமயம் அந்த பெண்ணிடம் பொலிசார் விசாரித்த போது நான் அந்த பணத்தை கேட்கவே இல்லை, எடுத்துக் கொண்டு போ என்று தான் சொன்னேன் என்று கூறியுள்ளார்.

இது குறித்து அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் ஒன்று, குறித்த பெண் காதலை பிரேக் அப் செய்து கொள்வதற்காக சுமார் 10 மில்லியன் யுவான் கேட்டுள்ளதாக (இலங்கை மதிப்பு 10 கோடிக்கு மேல்) தெரிவித்துள்ளது.

மேலும் இது குறித்து பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், இதன் பின்னணியில் இளைஞர் ஒருவர் இருப்பதாகவும், அவர் குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறியுள்ளனர்.

You might also like
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...