இம்ரான் கான் மீது மத இழிவுபடுத்தல் குற்றச்சாட்டின் பேரில் வழக்கு

61

சிவபெருமான் உருவத்தில் இம்ரான் கான் படம் சித்தரிக்கப்பட்டது இந்துக்களின் மனதை புண்படுத்தியதால், இன்ரான்கான் மீது எம்.பி. ரமேஷ் லால் மத அவமதிப்பு புகாரளித்துள்ளார்.
முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான்கான் படம் சிவபெருமான் வேடத்தில் சமூக வலை தளங்களில் வெளியிடப்பட்டது.

இதற்கு பாகிஸ்தானில் இந்துக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மத உணர்வை புண்படுத்துவதாக கூறி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த நிலையில் பாகிஸ்தானை சேர்ந்த இந்து மத எம்.பி. ரமேஷ் லால், இம்ரான்கான் மீது மத அவமதிப்பு புகார் தெரிவித்துள்ளார். இவர் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவராக இருக்கிறார்.

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி மியான் சாகிப் நிகார் மற்றும் ராணுவ தலைமை நீதிபதி உமர் ஜாவீத் பஜ்வா ஆகியோரிடம் மேல் முறையீடு செய்துள்ளார்.

இது குறித்து அவர் கூறும்போது, “சிவபெருமான் உருவத்தில் இம்ரான்கான் சித்தரிக்கப்பட்டது பாகிஸ்தானில் வாழும் ஆயிரக்கணக்கான இந்துக்களின் மனதை புண்படுத்திவிட்டது. இது மத அவமதிப்பாகும். இதன் மீது அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என கருதுகிறேன்” என தெரிவித்துள்ளார்.

You might also like
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...