குடல் புண் குணமாக, கைகால் மூட்டு வழி போக்க இன்னும் பல சிறிய நோய்களுக்கு அருமருந்துகள் !- மருத்துவ டிப்ஸ்

66

நீரில் சிறிதளவு டெட்டாலுடன் சிறிதளவு உப்பையும் கலந்துவிட்டு, பிறகு அத் தண்ணீரினால் குழந்தைகளைக் குளிப்பாட்டினால் எந்தவிதமான தோல்வியாதியும் குழந்தைகளை நெருங்காது.

பச்சை வெங்காயத்தை அரிந்து தயிரில் போட்டு இரவு படுக்கப்போகுமுன் சாப்பிட்டால் நிம்மதியான உறக்கம் வரும்.

அன்னாசிப்பழத்தை அடிக்கடி சாப்பிட்டால், உடலில் ஏற்படும் வலிகளும் மற்றும் கை, கால்களில் ஏற்படும் மூட்டுவலியும் நீங்கிவிடும்.

இரண்டு வெற்றிலையுடன், இரண்டு கராம்பு, ஒரு துண்டு சுக்கு வைத்து பால் தெளித்து நைஸாக அரைத்து நெற்றியில் பற்றுப் போட்டால் கடுமையான தலைவலி நீங்கும்.

•அறுகம்புல் சாற்றை அடிக்கடி பருகி வந்தால் நரம்புத் தளர்ச்சி நீங்கும். வயிற்றுப்புண், குடல்புண் குணமாகும்.

You might also like
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...