இளவரசர் ஹாரி – மேகன் திருமணத்திற்கு எலிசபெத் ராணி ஒகே சொல்லிவிட்டார்

23

பிரிட்டன் இளவரசர் ஹாரியின் திருமணத்துக்கு ராணி இரண்டாம் எலிசபெத் முறைப்படி ஒப்புதல் அளித்துள்ளார்.

பிரிட்டன் அரியணை வரிசையில் ஐந்தாவதாக அமரவுள்ளவர் இளவரசர் ஹாரி. கடந்த 2016-ம் ஆண்டில் இருந்து இளவரசர் ஹாரியும், அமெரிக்க நடிகையான மேகன் மார்க்லேவும் காதலித்து வந்தனர்.

இந்த ஜோடியினர் கடந்த டிசம்பர் மாதத்தில் நிச்சயம் செய்துகொண்டனர். அதன்படி, இளவரசர் ஹாரி – மேகன் மார்க்லேயின் திருமணம் இந்த மாதம் 19-ம் தேதி நடைபெற உள்ளது. அரச குடும்பம் முறைப்படி இந்த திருமணத்துக்கு லண்டன் ராணி முறைப்படி ஒப்புதல் அளிக்க வேண்டும்.

இந்நிலையில், இளவரசர் ஹாரியின் திருமணத்துக்கு பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் இன்று முறைப்படி ஒப்புதல் அளித்துள்ளார். அதற்காக ராணி எலிசபெத் கையொப்பமிட்ட ஒப்புதல் கடிதத்தை பக்கிங்காம் அரண்மனை இன்று வெளியிட்டுள்ளது.

You might also like
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...