கண்டி வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய நபர்களின் விளக்க மறியல் நீடிப்பு

29

கண்டி வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய நபர்களின் விளக்க மறியல் நீடிப்பு

அண்மையில் கண்டியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் பிரதான சூத்திரதாரி என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட மஹசோன் பலகாயவின் தலைவர் அமித் வீரசிங்க உள்ளிட்ட 34 பேரின் விளக்கமறியல், எதிர்வரும் 28ஆம் திகதி வரையிலும் நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த வன்முறைச் சம்பவங்கள், திகனை உள்ளிட்ட பிரதேசங்களில் மார்ச் மாதம் முதல்வாரத்தில் இடம்பெற்றன.

குறித்த வன்முறைச் சம்பவங்களைத் தூண்டியவர்கள் என்ற சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்ட அனைவரும், தெல்தெனிய நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.எச். பரீக்டீன் முன்னிலையில் இன்று மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டனர். அதன்போதே, நீதவான் மேற்கண்ட உத்தரவைப் பிறப்பித்தார்.

You might also like
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...