உலகின் மிக மோசமான பத்து மாபீயா கும்பல்கள்

34

திட்டமிட்ட வகையில் பாரிய குற்றச் செயல்களில் ஈடுபட்டு வரும் மாபீயா (குற்றமிழைக்குழுக்கள்) கும்பல்கள் பற்றிய தகவல்கள் கீழே பட்டியல்படுத்தப்பட்டுள்ளன. எந்த நாட்டை மையமாகக் கொண்டு இயங்குகின்றார்கள் என்பதனையும், இந்த நாட்டவர்கள் அதிகமாக குழுவில் அங்கம் வகிக்கின்றனர் என்பதனை அடிப்படையாகக் கொண்டும் மாபீயா கும்பல்களுக்கு பெயரிடப்பட்டுள்ளது. ஆயுதக் கடத்தல், போதைப் பொருள் வர்த்தகம் உள்ளிட்ட பாரிய குற்றச் செயல்களை இந்தக் கும்பல்கள் மேற்கொண்டு வரும், இந்தக் கும்பல்களின் மோசமான தன்மைக்கு ஏற்ப பட்டியல் படுத்தப்பட்டுள்ளது.

1. ரஸ்ய மாபீயா கும்பல்
கலைப் பொக்கிஷங்கள் முதல் அணுவாயுத தொழில்நுட்பம் வரையிலான சகல சட்டவிரோத வர்த்தக நடவடிக்கைகளிலும் இந்த கும்பல் ஈடுபட்டு வருகின்றது. எதிரிகளை துப்பாக்கி தோட்டாக்களினால் சல்லடையாக்குவதனை வழமையாகக் கொண்ட இந்த அமைப்பு ரஸ்யாவை குறிப்பாக தலைநகர் மொஸ்கோவை மையமாகக் கொண்டு இயங்கி வருகின்றது. ரஸ்ய மாபீயா கும்பல் உறுப்பினர்கள் திட்ட வகையில் சர்வதேச ரீதியான குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். மொஸ்கோவின் ஸ்லோன்ட்ஸ்வெஸ்கயா பிரட்வா (Solntsevskaya Bratva) எனப்படும் மாபீயா கும்பல் உலகின் மிக மோசமான கும்பலாக ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது.
சோவியத் ஒன்றியத்திலிருந்து உருவான ரஸ்ய மாபீயா அமைப்பு தற்போது உலகம் முழுவதிலும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றது. இந்த மாபீயா கும்பலில் 100000 முதல் 500000 வரையிலான உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர். இஸ்ரேல், ஹங்கேரி, அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, ஸ்பெய்ன் மற்றும் ரஸ்யா உள்ளிட்ட பல நாடுகளில் இந்தக் கும்பல் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றது. போதைப் பொருள் கடத்தல், சட்டவிரோத ஆயுதக் கொடுக்கல் வாங்கல், இணைய மோசடி, பாலியல் குற்றச் செயல்கள், குண்டுத் தாக்குதல்கள் மற்றும் கடத்தல்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களுடன் இவர்களுக்கு தொடர்பு இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
1980ம் ஆண்டு முதல் இந்த மாபீயா கும்பல் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும், இந்தக் கும்பலின் பிதமகராக செர்ஜி மிக்கலோவ் கருதப்படுகின்றார். இந்த அமைப்பு ஏனைய பல மாபீயா குழுக்களை ஒன்றிணைந்து பாரிய வலைமையப்பைகாக இன்று உருப்பெற்றுள்ளது.

2. சிசிலிய மற்றும் அமெரிக்க கோசா நொஸ்ட்ரா

சிசிலிய மற்றும் அமெரிக்க கோசா நொஸ்ட்ரா மாபீயா கும்பல் 19ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இந்தக் கும்பலின் நடவடிக்கைகள் இத்தாலியில் ஆரம்பிக்கப்பட்டது. இந்தக் கும்பல் பாரிய குற்றச் செயல்களை திட்டமிட்ட முறையில் மேற்கொண்டிருந்தது. ஆயுதக் கடத்தல், போதைப் பொருள் கடத்தல், ஏனைய மாபீயா கும்பல்களுக்கு இடையில் மத்தியஸ்தம் வகித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை பிரதானமாகக் கொண்டு மாபீய கும்பல் இயங்கி வருகின்றது. இந்தக் கும்பலில் 3500 முதல் 4000 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர்.

3. கொலம்பிய போதைப் பொருள் கடத்தல் கும்பல்

கொலம்பிய போதைப் பொருள் கும்பல் போதைப் பொருட்களை கடத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டது. இராணுவ, அரசியல் மற்றும் சட்டம் ஆகிய பல துறைகளில் இந்தக் கும்பல் அமைப்புக்களை நிறுவி அதன் மூலம் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றது. காலி, மெடிலியன், நொர்ட் டெல் வெலி போன்ற கும்பல்கள் முக்கியமான கும்பல்களாகக் கருதப்படுகின்றது. அமெரிக்காவிற்கும் கொலம்பியாவிற்கும் இடையிலான ஒப்பந்தமொன்றை அடுத்து கும்பல்களின் முக்கிய உறுப்பினர்களை நாடு கடத்த் தீர்மானிக்கப்பட்டிருந்தது. இந்தக் காலப்பகுதியில் முக்கிய தலைவர்கள் தலைமறைவாகி வாழத்தொடங்கினர். தீவிரவாதம் மற்றும் ஆட் கடத்தல் நடவடிக்கைகளில் மெக்ஸிக்கோ மாபீயா கும்பல்கள் அதிகளவில் ஈடுபட்டு வருகின்றன.

4. சீனாவின் ட்ரைட்ஸ்வே

சீனாவின் ட்ரைட்ஸ்வே மாபீயா கும்பல் பல்வேறு கிளைக் கும்பல்களைக் கொண்டமைந்துள்ளது. சீனா, மலேசியா, ஹொங்கொங், தாய்வான், சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளில் இந்தக் குழு இயங்கி வருகின்றது. நியூயோர்க், லொஸ் ஏஞ்சல்ஸ், வென்குவார் மற்றும் சென் பிரான்ஸிஸ்கோ ஆகிய நகரங்களிலும் இந்தக் கும்பல் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றது. ஒப்பந்தக் கொலை, கொள்ளை, போதைப் பொருள் கடத்தல், கப்பம் கோரல், உள்ளிட்ட பல்வேறு திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் இந்த கும்பலுக்கு நெருங்கிய தொடர்பு காணப்படுகின்றது. 18ம் நூற்றாண்டு முதல் இந்தக் கும்பல் இயங்கி வருவதுடன், அப்போது இந்தக் கும்பலுக்கு தியன் டி ஹ_ய் என பெயரிடப்பட்டிருந்தது. நீண்ட காலமாக இயங்கி வந்த போதிலும் இந்த அமைப்பின் செயற்பாடுகள் மிகவும் வரையறைக்கப்பட்டதாகவே காணப்படுகின்றது. இந்த மாபீயா கும்பலில் 50 முதல் 30000 வரையிலான உறுப்பினர்கள் அங்கம் வகிக்கலாம். போலி நாணத் தாள்தகள் தயாரிக்கும் பணிகளிலும் இந்தக் கும்பல்கள் ஈடுபட்டு வருகின்றன.

 

5. யாக்குஸா

ஜப்பானை மையமாகக் கொண்டு இயங்கி வரும் யாக்குஸா கும்பல் பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டது. அச்சுறுத்தல்கள், கடத்தல்கள் மற்றும் கப்பம் கோரல் போன்ற குற்றச் செயல்களை இந்தக் கும்பல் பிரதானமாக மேற்கொண்டு வருகின்றது. 17ம் நூற்றாண்டு முதல் இந்தக் கும்பல் ஜப்பானில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. சில உறுப்பினர்களின் உடல் முழுதிலும் பச்சை குத்தப்பட்டிருக்கும். 2500 குடும்பங்களைச் சேர்ந்த 11000 உறுப்பினர்கள் இந்த அமைப்பில் அங்கம் வகிக்கின்றனர். பாலியல் திரைப்படங்களை சட்டவிரோதமாக இறக்குமதி செய்தல், கப்பம் கோரல், கடத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை இந்தக் கும்பல் மேற்கொள்கின்றது.

6. மெக்ஸிக்கன் மாபீயா

மெக்ஸிக்கன் மாபீயா மிகவும் வலுவான ஓர் அமைப்பாகும், அமெரிக்காவின் சிறைச்சாலைகளை மையமாகக் கொண்டு இந்த அமைப்பு இயங்குகின்றது. 1950களின் கடைக்கூற்றில் இந்தக் கும்பல் உருவாக்கப்பட்டது. கைதிகளை பாதுகாக்கும் நோக்கில் இந்த கும்பல் உருவாக்கப்பட்டது. கடத்தல் மற்றும் கப்பம் கோரல் சம்பவங்களை இந்தக் கும்பல் மேற்கொண்டு வருகின்றது. அமெரிக்காவின் பல பாகங்களிலும் 30000 உறுப்பினர்கள் செயற்பட்டு வருகின்றனர். இந்தக் கும்பலைச் சேர்ந்த உறுப்பினர்களில் அநேகர் பச்சை குத்தியிருப்பார்கள். 150 சிறைக் கைதிகளே இந்தக் கும்பலுக்கு கட்டளைகளை இடுவதாகவும் இதனை 2000 உறுப்பினர்கள் நிறைவேற்றி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

7. இஸ்ரேல் மாபீயா

இஸ்ரேலிய மாபீயா அமைப்பு உலகின் பல நாடுகளில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றது. போதைப் பொருள் கடத்தல் மற்றும் பாலியல் தொழில் ஆகியனவே இந்த அமைப்பின் பிரதான குற்றச் செயலாகும். கடந்த காலங்களில் இஸ்ரேல் மாபீயாக்கள் மிகவும் மனிதாபிமான முறையில் செயற்பட்ட போதிலும் தற்போது அருகில் இருப்பரை படுகொலை செய்வதற்கு ஒரு நொடியும் யோசிப்பதில்லை. ரஸ்ய – இஸ்ரேலிய மாபீயா அமைப்புக்கள் அமெரிக்காவிற்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி வருகின்றனர்.

8. சைபீரிய மாபீயா

சைபீரியா பல நாடுகளில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றது. ஜெர்மனி, அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகளில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றது. போதைப் பொருள் கடத்தல், சட்டவிரோத ஆயுதக் கொடுக்கல் வாங்கல்கள், கடத்தல்கள், ஒப்பந்தப்படுகொலை, சூதாட்டம் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களுடன் இந்த அமைப்பு தொடர்பு கொண்டுள்ளது. வெஸ்டோவாக், சுர்சின் மற்றும் செம்யூன் ஆகிய பெயர்களில் இந்தக் குழு இயங்கி வருகின்றது. 30-40 வரையிலான குழுக்கள் குற்றச் செயல்களை மேற்கொண்டு வருகின்றன.

9. அல்பானிய மாபீயா

அல்பானிய மாபீயா கும்பலில் பல குழுக்கள் அங்கம் வகிக்கின்றன. அல்பானியாவை மையமாகக் கொண்டு இயங்கி வரும் இந்த அமைப்பு பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடையது. அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் இந்தக் கும்பல்கள் குற்றச் செயல்களை இழைத்து வருகின்றது. 1980ம் ஆண்டு முதல் அல்பானிய மாபீயா கும்பல் சர்வதேச ரீதியான குற்றச் செயல்களை வியாபித்திருந்தது. எவ்வாறெனினும், அல்பானிய மாபீயா குழுக்கள் 15ம் நூற்றாண்டு முதல் இயங்கி வருகின்றன. பாலியல் மற்றும் போதைப் பொருளுடன் தொடர்புடைய குற்றச் செயல்களில் இந்தக் குழு அதிகமாக ஈடுபடுகின்றது.

10. தி பை பெமிலிஸ்
தி பை பெமிலிஸ் என்ற கும்பல் ஐந்து அமெரிக்க இத்தாலி மாபீயா குழுக்களை உள்ளடக்கியது. 1930ம் ஆண்டு முதல் நியூயோர்க்கில் இந்தக் கும்பல்கள் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றன. மரான்சானோ மற்றும் மசாரியா ஆகிய குடும்பக் கும்பல்களே இதற்கு முன்னர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தன. பை பெமிலிஸ் அமைப்பு பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடையது.

You might also like
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...