Take a fresh look at your lifestyle.

நடக்காமல் முடிந்ததா நிச்சயிக்கப்பட்ட பலப்பரீட்சை ?

இரு துருவங்கள் ஒன்றாகிறதா ?

கடந்த சில மாதங்களாக மூன்றாம் உலக போருக்கு தயாராகிக் கொண்டிருந்த உலக நாடுகள் சற்று இளைப்பாற தொடங்கி இருக்கின்றனர்

சில மாதங்கள் முன்பு வரை கடுமையான சொற்போரில் ஈடுபட்டு வந்த வட கொரியா மற்றும் அமெரிக்கா இரண்டு நாடுகளின் தலைவர்களும், அடுத்தடுத்து எதிர்பாராத விதமாக நடந்த நேர்மறையான நிகழ்வுகள், மற்றும் ராஜ தந்திர முன்னெடுப்புகளின் மூலம் தற்போது பேச்சுவார்த்தை வரை வந்துள்ளார்கள். இரு நாட்டினரின் உறவு

சமீப வாரங்களில் இரண்டாவது முறையாக அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மைக் பாம்பியோ புதன்கிழமை வடகொரியா சென்று திரும்பினார். அவரது பயணத்தின்போது வடகொரியாவின் சிறையில் இருந்த மூன்று அமெரிக்கக் குடிமக்களை அந்நாடு நல்லெண்ண நடவடிக்கையாக விடுவித்தது. அவர்கள் உடனடியாக அமெரிக்கா திரும்பினர். அப்போது டிவிட்டர் மூலம் கருத்துத் தெரிவித்த டிரம்ப், கிம்- பாம்பியோ இடையே நடந்த சந்திப்பு நல்லவிதமாக இருந்ததாகவும், உச்சி மாநாட்டுக்கான தேதியும், இடமும் முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

மேற்படி இரு நாட்டு தலைவர்களின் சந்திப்பானது சிங்கப்பூரில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது இயலான காரணங்கள் வெளியிடப்பட்டுள்ளன. உயர்மட்ட ராஜீய நிகழ்வுகளை நடத்துவதற்கு சிங்கப்பூர் அவ்வப்போது தேர்ந்தெடுக்கப்படுகிறது. 2015ம் ஆண்டு, சீனா மற்றும் தைவான் நாடுகளின் தலைவர்கள் 60 ஆண்டுகளில் முதல் முறையாக சந்தித்துப் பேசிய நிகழ்வும் சிங்கப்பூரில்தான் நடந்தது.இந்த சந்திப்பை நடத்துவதற்குப் பரிசீலிக்கப்பட்ட பிற இடங்களில் மங்கோலியா, இரண்டு கொரிய நாடுகளுக்கும் இடையிலான ராணுவ நீக்கம் செய்யப்பட்ட பகுதி ஆகியவையும் அடங்கும்.

error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...