Take a fresh look at your lifestyle.

உணவே மருந்து – காலை உணவு அருமருந்து – காலை உணவின் முக்கியத்துவம்

நீங்கள் செய்யும் ஒவ்வொரு வேலைக்கும் ஒரு சக்தி செலவிடப்படுகிறது. இந்த சக்தி எதிலிருந்து கிடைக்கிறது கட்டாயம் இந்த ஆற்றலானது உணவில் இருந்து தான் கிடைக்கிறது.

நீங்கள் உணவு சாப்பிடுவதற்கு கூட ஒரு ஆற்றல் செலவிடப்படுகிறது. சாப்பிட்ட உணவை வயிற்றில் சேமித்து வைத்திருப்பதற்கு கூட ஒரு ஆற்றல் தேவைப்படுகிறது. இதிலிருந்தே உங்களுக்கு உணவின் முக்கியத்துவம் புரியும்..!

காலை உணவை ஒரு ராஜாவை போல சாப்பிட வேண்டும், மதிய உணவை ஒரு மந்திரியை போல சாப்பிட வேண்டும் மற்றும் இரவு உணவை பிச்சைக்காரனை போல சாப்பிட வேண்டும் என்று கூறுவார்கள்..

ஆம் நீங்கள் பள்ளியில் படிக்கும் போது இது பொருத்தமான ஒரு கருத்தாக இருக்கும். காலை உணவை நீங்கள் சாப்பிடவில்லை என்றால் சோர்வடைந்துவிடுவீர்கள்.. பின் படிப்பில் கவனமே இருக்காது.

உங்களது கலோரி தேவையை நீங்கள் தினசரி தரும் உடல் உழைப்பு தான் தீர்மாணிக்கிறது. பொதுவாக அதிகமாக உடல் உழைப்பு தேவைப்படும் வேலைகளில் இருப்பவர்களுக்கு தினசரி அதிக கலோரிகள் தேவைப்படுகிறது.

அதுவே குறைந்த உடல் உழைப்பு, உடல் உழைப்பே இல்லாதவர்களுக்கு கலோரிகள் அதிகமாக எரிக்கப்படுவதில்லை. இதனால் இவர்களுக்கு குறைந்த கலோரிகளே போதுமானது. நீங்கள் சாப்பிடுவதை விட அதிக கலோரிகளை நீங்கள் எரித்தால் எளிதில் உடல் எடையை குறைக்கலாம்.

error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...