மிளகாய் வத்தல் வறுக்கும் போது சிறிது உப்பு சேருங்கள் தும்மல் வராது – மேலும் பல சமையலறை டிப்ஸ்கள்

சமையல் அறை டிப்ஸ்கள்

மிளகாய் வத்தலை வறுக்கும் பொழுது சிறிது உப்பு சேர்த்து வறுத்தால் ஹச்…… ஊச்……… என்று தும்மல் ஏற்பட்டு பாடாய்படுத்தாது.

வடகத்தை வெறும் வாணலியில் வறுத்த பின் எண்ணெயில் வறுத்தால் நன்றாக பொரிந்து மொறு, மொறுப்பாக இருக்கும்.

வேப்பம் பூவை நெய்யில் வறுத்து சிறிது உப்பு சேர்த்து சாதத்தில் பிசைந்து பயன்படுத்தினால் ஜுரம், வரவே வராது.

அருகம்புல் சாறு எடுத்து சப்பாத்தி மாவில் கலந்து ரொட்டி செய்து சாப்பிடுவது நல்லது. தாது உப்புக்களும், வைட்டமீன்களும் அருகம்புல்லில் அதிகம் உள்ளன

ஓமப்பொடி செய்யும் பொழுது கடலைமாவு, மூன்று பங்கு, அரிசி மாவு ஒரு ,பங்கு சிறிது மைதா கலந்து செய்தால் எண்ணெய் குடிக்காமலும், தூள் அதிகமாகமலும், நன்றாக எடுக்க வரும்.

கறிவேப்பிலைச் செடி நன்கு வளர புளித்த மோருடன் நீர் கலந்து ஊற்றி வரலாம்.

You might also like
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...