வவுனியா சிறையில் கைதிகள் போராட்டம்

19

வவுனியா சிறைச்சாலையில் உள்ள கைதிகளை போராட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர்.

தம்மை, அனுராதபுரம் சிறைச்சாலைக்கு மாற்றுவதுக்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கைதிகள் இன்று சிறையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அண்மையில் வவுனியா சிறைச்சாலையில் கைதிகளுக்கு அநீதி இடம்பெறுவதாகவும் போதைவஸ்து பாவனைகளும் அதிகளவில் இடம்பெறுவதாகவும் தெரிவித்து வவுனியா சட்டத்தரணிகள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதனை அடுத்து வவுனியா சிறைச்சாலைக்குள் போதைவஸ்து பாவனை இருப்பதாகவும் சட்ட விரோதமாக சிறைச்சாலைக்குள் போதைவஸ்து வருவதாகவும் தெரிவித்து கைதி ஒருவரை நேற்று சிறைக்காவலர்கள் தாக்கியமையால் அக்கைதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இதன் தொடர்ச்சியாக சிறைக்கைதிகளை அனுராதபுரம் சிறைச்சாலைக்கு மாற்றுவதுக்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து, இன்று சிறைக்கைதிகள் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

You might also like
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...