விஜய் புகழ்ந்து பாராட்டிய நடிகை யார்?

30

பிரபல, நடிகர் விஜய் , நடிகை ஒருவரை புகழந்து பாராட்டியுள்ளார்.
நடிகையர் திலகம் படத்தில் சாவித்ரி வேடத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்த கீர்த்தி சுரேஷை, நடிகர் விஜய் பாராட்டி இருக்கிறார்.

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் ‘நடிகையர் திலகம்’. இப்படம் பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. இதில் சாவித்ரி கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். நாக் அஸ்வின் இப்படத்தை இயக்கி இருந்தார்.

இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ரசிகர்கள் மட்டுமில்லாமல், சினிமா பிரபலங்கள் பலரும் இப்படத்தை பாராட்டி வருகிறார்கள். நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் கீர்த்தி சுரேஷை அழைத்து பாராட்டினார். தற்போது விஜய்யும் கீர்த்தி சுரேஷை பாராட்டி இருக்கிறார்.

தற்போது கீர்த்தி சுரேஷ், விஜய்யுடன் இணைந்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இதில் விஜய்யுடன் கீர்த்தி சுரேஷ் டான்ஸ் ஆடும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் ‘நடிகையர் திலகம்’ படத்தை பார்த்த விஜய், கீர்த்தி சுரேஷ் வெகுவாக பாராட்டியுள்ளார்.

You might also like
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...