ஏழு நாட்களில் இரண்டு தடவைகள் லாட்டரியில் பரிசு வென்ற அவுஸ்திரேலியர்

31

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒருவர் இரண்டு லாட்டரிகளில் விழுந்த 25 லட்சம் ஆஸ்திரேலிய டாலர் பரிசுத்தொகை மூலம் ஒரே வாரத்தில் பணக்காரரான சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரைச் சேர்ந்த ஒருவர் நியூ சவுத்வேல்ஸ் லாட்டரி நிறுவனத்திடமிருந்து ஒரு லாட்டரி சீட்டை வாங்கியிருந்தார். அந்த சீட்டுக்கு கடந்த வாரம் திங்கட்கிழமை நடந்த குலுக்கலில் அவருக்கு 10 லட்சத்து 20 ஆயிரத்து 487 ஆஸ்திரேலிய டாலர் (1 ஆஸ்திரேலிய டாலர் என்பது இந்திய மதிப்புக்கு சுமார் 51 ரூபாய்) பரிசுத்தொகையாக கிடைத்தது. இந்த அதிர்ச்சியில் இருந்த அவர் விலகுவதற்குள் அதே நிறுவனத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற குலுக்கலில் அவருக்கு மேலும் 14 லட்சத்து 57 ஆயிரத்து 834 டாலர்கள் பரிசாக கிடைத்த தகவல் தற்போது தெரியவந்துள்ளது.

லாட்டரியில் பரிசாக கிடைத்த சுமார் 25 லட்சம் டாலர் பணத்தை ரியல் எஸ்டேட் வியாபாரத்தில் முதலீடு செய்யப்போவதாகவும், தனக்கு பிடித்தமான கார்களை வாங்குவதிலும், வெளிநாடு சுற்றுலா செல்வதிலும் கொஞ்சம் தொகையை செலவழிக்கப்போவதாகவும் அந்த அதிர்ஷ்டசாலி குறிப்பிட்டிருந்தார்.

ஆஸ்திரேலியாவில் ஏராளமான அரசு மற்றும் தனியார் லாட்டரி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிறுவனங்கள் மூலம் ஒருவரே தனது வாழ்நாளில் இரண்டு முறை பரிசு பெற்றதுண்டு. ஆனால், ஒரே வாரத்தில் அதே நபர் இருமுறை பரிசு பெற்றது இதுவே முதல்முறை என லாட்டரி நிறுவனம் தெரிவித்துள்ளது.

You might also like
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...