உங்களுக்கும் இருதய நோய் இருக்கலாம் ! வாங்க இலகுவாக சோதிக்கலாம் – மருத்துவம்

80

பல ஆயிரம் ரூபாய்களைச் செலவு செய்த மன வருத்தத்தோடு நாம் மேற்கொள்ளும் பரிசோதனை இல்லாத இதய நோயையும் இருப்பதாகவே காட்டும். இனி இந்தக் கவலை வேண்டாம் மிகவும் எளிதாக உங்கள் கால் விரலைக் குனிந்து தொட்டு உங்களது இதய ஆரோக்கியம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

எப்படிச் செய்வது?

இந்த முறை மூலமாக ஒருவேலை இதய நோய் இருக்கிறது என்றால் அதை முன்கூட்டியே தெரிந்து கொண்டு தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபடலாம். இதை நீங்கள் வீட்டில் இருந்தவாறே செய்து விடலாம்.

நீங்கள் நின்றோ அல்லது தரையில் அமர்ந்தவரோ இதைச் செய்யலாம். நிற்கிறீர்கள் என்றால் உங்கள் இரு கால்களையும் சேர்த்து நிமிர்ந்து நில்லுங்கள். உட்கார்ந்து இருக்கிறீர்கள் என்றால் சம நிலையான நிலப் பரப்பில் கால்கள் இரண்டையும் நீட்டி அமருங்கள்.
இப்போது உங்களது முட்டியை மடக்காமல் கைகளை நீட்டி கால் விரலைத் தொட முயற்சியுங்கள்.
உங்களால் தொட முடிந்தால் உங்களது இதயம் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக அர்த்தம். அப்படித் தொட முடியவில்லை என்றால் உங்களது கை விரலுக்கும் கால் விரலுக்கும் இருக்கும் இடைவேளையே உங்களுக்கும் இதய ஆரோக்கியத்திற்கும் இடையே இருக்கும் தூரம்.


தொப்பை உள்ளவர்கள் அதாவது அதிக கொழுப்பு மற்றும் ரத்த அழுத்தம் உள்ளவர்களால் இதை அவ்வளவு எளிதாகச் செய்ய முடியாது. தேவையற்ற கொழுப்பு மற்றும் ரத்த அழுத்தம் ஆகிய இரண்டும் இதய நோய் வருவதற்கான ஒரு முக்கிய காரணி ஆகும்.

ஆய்வு முடிவு:

20 முதல் 83 வயது வரையிலான 500 நபர்களை வைத்து நடத்தப்பட்ட இந்த ஆய்வில் அவர்களது உயிரியல் புள்ளிவிவரங்களும் கணக்கிடப்பட்டது. சோதனையின் போது ஒவ்வொருவரின் இதய செயல் பாடு மற்றும் ரத்த அழுத்தம் ஆகியவையும் கண்காணிக்கப்பட்டது.

மருத்துவ பரிசோதனை நிலையங்களுக்குச் சென்று பல ஆயிரங்களைச் செலவு செய்து உங்களுக்கு இதய நோய் உள்ளதா இல்லையா என்று தெரிந்துகொள்வதை விட வீட்டில் இருந்தவாறே இந்த எளியச் சோதனையை செய்து உங்கள் இதய ஆரோக்கியம் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.

You might also like
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...