பிரபல எழுத்தாளர் பாலகுமாரன் காலமானார்

36

புகழ்பூத்த எழுத்தாளர் பாலகுமாரன் இன்றைய தினம் காலமானார்.
பாலகுமாரன் , (ஜூலை 5, 1946 – மே 15, 2018) தமிழ்நாட்டில் வாழ்ந்த புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர் ஆவார்.

இவர் தஞ்சாவூர் மாவட்டத்தில் திருக்காட்டுப்பள்ளி வட்டத்தில் உள்ள பழமார்நேரி என்னும் சிற்றூரில் தமிழாசிரியர் சுலோசனா என்பவருக்கு மகனாகப் பிறந்தார். பதினொன்றாம் வகுப்பு வரை பயின்ற இவர். தட்டச்சும் சுருக்கெழுத்தும் கற்று தனியார் நிறுவனத்தில் 1969ஆம் ஆண்டில் சுருக்கெழுத்தராகப் பணியாற்றத் தொடங்கினார். அவ்வாண்டிலேயே கவிதைகள் எழுதத் தொடங்கினார். அவற்றுள் சில கணையாழி இதழில் வெளிவந்தன. பின்னர் டிராக்டர் கம்பெனியில் உயர் அதிகாரியாக பணியாற்றினார். திரைத்துறையில் பணியாற்றுவதற்காக அப்பணியைத் துறந்தார். இவர் 100-க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், 200-க்கும் மேற்பட்ட நெடுங்கதைகளையும் சில கவிதைகளையும் கட்டுரைகளையும் எழுதி உள்ளார்.
இரும்புக்குதிரைகள் நாவல் மூலம் தமிழ் இலக்கிய ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பெற்றவர் நாவலாசிரியர் பாலகுமாரன். பிரபல மாத, வார பத்திரிக்கைகளையும், சிறுகதைகளையும் எழுதி மக்களிடையே நன்கு பரிட்சையமான அவர், கமல்ஹாசன் நடித்த நாயகன் உள்பட 20-க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார்.

தமிழக அரசின் கலைமாமணி உள்ளிட இலக்கியத்துறை சார்ந்த பல்வேறு விருதுகளை பெற்றுள்ள பாலகுமாரன், சமீப காலமாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாலகுமாரனின் உயிர் இன்று பிற்பகல் பிரிந்தது. அவருக்கு வயது 71.

பாலசந்தரின் குழுவில் மூன்று திரைப்படங்களிலும்கே. பாக்யராஜ்குழுவில் இணைந்து சில படங்களிலும் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். பின்னர் இது நம்ம ஆளு என்னும் திரைப்படத்தை கே. பாக்யராஜ் மேற்பார்வையில் இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் பற்றிய விபரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
பாலகுமாரனின் மறைவுக்கு எழுத்துலகம் மற்றும் கலையுலகத்தை சேர்ந்தவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

You might also like
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...