இலங்கையில் பஸ் கட்டணங்கள் உயர்வு

41

இலங்கையில் பஸ் கட்டணங்கள் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் பஸ் கட்டணத்தை 6.56 வீதத்தால் அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் வருடாந்த பஸ் கட்டண திருத்தம் என்பனவற்றை அடிப்படையாகக் கொண்டு, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் எம்.ஏ.பி ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் குறைந்த பட்ச கட்டணமான 10 ரூபா பஸ் கட்டணத்தில் எவ்வித மாற்றமும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

You might also like
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...