முன்னர் நான் தான் ரஜினிக்கு தலைவர் – சொல்கிறார் குழந்தை நட்சத்திரம் நடிகர் மகேந்திரன்

100

குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி தற்போது 25 வருடங்களை சினிமா உலகில் பூர்த்தி செய்து கொண்டிருக்கிறார் மகேந்திரன் சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டியொன்றில்

சினிமாவில் ரொம்ப க்ளோஸ்னா அது ரஜினி சார்தான். நிறைய பேசியிருக்கோம் ரெண்டு பேருமே. ஒரு நாள் ’அருணாச்சலம்’ படத்தோட ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு நான் போயிருந்தேன். அப்போ ரம்பா மேடம்க்கூட ’அல்லி அல்லி அனார்க்கலி’ சாங் ஷூட் போயிட்டு இருந்துச்சு.

ஷாட்டுக்கு முன்னாடி என்கிட்ட உக்கார்ந்து நிறைய விஷயங்கள் பேசினார். அரசியல் பத்தியெல்லாம் பேசுவார். எனக்கு ஒன்னுமே புரியாது. நாங்க பேசிட்டு இருக்கும்போது மாஸ்டர் கூப்பிட்டதும் டான்ஸ் ஆட போயிட்டார் ரஜினி சார்.

அவர் அங்க ஆடிட்டு இருக்கும் போதே, ‘தலைவா… ஸ்டெப்ஸ் எப்படி ஓகேவா..?’னு கேட்டார். ரஜினி சார் எப்போதும் என்னை ’தலைவா’னுதான் கூப்பிடுவார். இப்போ நான் ஹீரோ ஆனதுக்கு அப்பறம் சாரை நிறைய இடங்களில் பார்த்தேன். ஆனா பேச முடியலை.

You might also like
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...