தங்க நகை அணிபவரா நீங்கள் ! இது உங்களுக்குத்தான் !!..

40

தங்கம் அணிபவர்களே !…

விஷேஷங்களுக்கு செல்லும் போது நகைகளை பெட்டியோடு கொண்டு செல்ல வேண்டாம் அந்த காலத்து பாட்டிகளின் சுருக்கு பை (அ) துணி பர்ஸ்களில் வைத்து கொண்டு செல்லவும்.

இதனால் நகை பெட்டி நகைபெட்டி என்று அந்த பெரிய பேக் களை பாதுகாக்க தேவையில்லை, கைக்கு அடக்கமா ஹேண்ட் பேக்கிலேயே வைத்து கொள்ளலாம்.

பிரேஸ்லேட் அணியும் போது சின்ன கோல்ட் கலர் சேஃப்டி பின்னை கொக்கி வளையத்தில் மாட்டி கொண்டால் டென்ஷன் இல்லாமல் இருக்காலாம்.

நகைகளை பெரிய பார்சலாக தூக்கி கொண்டு போகாமல் சின்ன இரண்டு முன்று பர்ஸ்கள் வைத்து கொள்ளவும்.அதில் கம்மல், மோதிரம், மாட்டல் ஒரு பர்ஸிலும், வளையல் ஒரு பர்ஸிலும், பெரிய ஹார்கள், மாலைகள் ஒரு பர்ஸிலும் வைத்து கொண்டால் எடுப்பது சுலபம் . கவரிங் நகைகள் செண்ட் போன்றவை தனித்தனியாக வைக்கவும்

நகைகளை அணியும் போது ஓரிடத்தில் அமர்ந்து அணியவும்.கம்மல், மூக்குத்தி போன்றவை அணியும் போது பேசி கொண்டே அவசரமாக அணிய வேண்டாம்.

கல்யாண பெண்களுக்கு, சின்ன குழந்தைகளுக்கு நெற்றி சுட்டி வைக்கும்போது அது தலையில் ஒரு இடத்தில் நிற்காது அதற்கும்சேஃப்டி பி ன் தான் நேர் வ்கிடு ஆரம்பிக்கும் இடத்தில் முடியோடு சேர்த்து ரிங்கில் குத்தி விடுங்கள் அது நீங்க சொன்ன பேச்சை கேட்கும்.

You might also like
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...