கண்டி வன்முறை குறித்து மஹிந்த தரப்பு பாராளுமன்ற உறுப்பினரிடம் 12 மணி நேரம் விசாரணை

19

கண்டியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரிடம் பன்னிரெண்டு மணித்தியாலங்கள் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

பயங்கரவாத புலனாய்வு பிரிவுக்கு விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டிருந்த கூட்டு எதிர்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகமவை தொடர் விசாரணைகளின் பின்னர் வீட்டிற்கு செல்ல அனுமதித்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
கண்டி பிரதேசத்தில் அண்மையில் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்படுகின்ற விசாரணைகளுக்கு அமைவாக வாக்குமூலம் வழங்குவதற்கு அவர் அங்கு ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

திலும் அமுனுகமவின் அழைபேசியையும் பொலிஸார் பொறுப்பேற்றுக் கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த மார்ச் மாதம் கண்டி தெல்தெனிய, திகன போன்ற பிரதேசங்களில் இனக்குரோத செயற்பாடுகளினால் உயிர் மற்றும் உடமைச் சேதங்கள் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...