டெல்லியில் ஐ.பி.எல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 பேர் கைது

16

ஐ.பி.எல். 11-வது தொடர் போட்டிகள் கடந்த 7 ஆம் திகதி மும்பை நகரில் கோலாகலமாக தொடங்கியது. ஒவ்வொரு ஆண்டும் ஐ.பி.எல். போட்டிகளின் போது சூதாட்ட புகார் எழுந்து வருகிறது.

பொலிஸாரும் சூதாட்டங்களில் ஈடுபடுபவர்களை கைது செய்து வருகின்றனர்.

இந்நிலையில், டெல்லியின் கஞ்ஜவ்லா பகுதியில் சூதாட்டம் நடைபெறுவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் உள்ள நிசாம்பூர் கிராமத்தில் பொலிஸார் நடத்தினர். இந்த சோதனையின்போது சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 பேரை பொலிஸார் கைது செய்தனர்.

அவர்கள் கடந்த மே 13 ஆம் திகதி நடைபெற்ற சென்னை – ஐதராபாத் இடையிலான போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவர்களிடம் இருந்து 68 கையடக்க தொலைபேசிகள, 8 மடி கணினிகள், 3 எல்.இ.டி. தொலைக்காட்சிகள் மற்றும் சில பொருட்களை பறிமுதல் செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட அனைவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

You might also like
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...