ஆஹா உளுந்து வடை – ஏராளமான உளுந்துவடை டிப்ஸ்கள்

உளுந்து வடைக்கு அரைக்கும் போது கலவை தண்ணியாக போய் விட்டால் பொரிக்கும் போது அதிக எண்ணை குடிக்கும்.

உளுந்து வடைக்கு அரைக்கும் போது கொஞ்சமா தண்ணீர் தெளித்து அரைக்கனும், மிக்சி பிளேட் நடுவில் சிறிது எண்ணை விட்டால் சிக்காமல் அரையும்.

அரைக்கும் போது அப்ப ஒரு கத்தி கொண்டு வழித்து விட்டு அரைக்கலாம்.
ஐஸ் வாட்டரில் ஊறவைத்தால் மாவு நல்ல காணும்.

குழந்தைகளுக்கு கொடுக்கும் போது பச்சமிளகாய், இஞ்சியை அரைத்து விட்டால் காரம் வாயில் உரைக்காது, அவர்களுக்கு சிறிது துருவிய கேரட் (அ) பீட்ரூட் கலந்து சுட்டு கொடுக்கலாம்.

பொடியாக‌ கீரையும் அரிந்து போட்டு கீரை வ‌டையாக‌ சுட‌லாம்.

ந‌ல்ல‌ பெரிய‌தாக ஹோட்ட‌ல் போல் வ‌ர‌வேண்டும் என்றால் சிறிது ஈஸ்ட் ஊறவைத்து சேர்த்து பொரிக்க‌லாம்.

வ‌டைக்கு அரைத்து விட்டு அந்த‌ மிக்சியை அப்ப‌டியே வைத்து விட்டால் காய்ந்து மிக்சியில் ஒட்டி கொள்ளும். ஆகையால் அரைத்த‌ உட‌னே சிறிது த‌ண்ணீர் ஊற்றி சுழ‌ற்றி அரைத்து விட்டால் சுத்த‌மாக‌ க‌ழுவி எடுத்த‌து போல் ஆகிவிடும்.

பூபெய்திய‌ பெண்க‌ளுக்கு உளுந்து வ‌டை, உளுந்து சுண்ட‌ல், உளுந்து க‌ளி, உளுந்து அடை, உளுந்து பால், உளுந்து வட்லாப்பம் என்று செய்து கொடுக்க‌லாம்.

You might also like
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...