ஜெமினி கனேஷன் – இவர் நடித்த 30 திரைப்படங்கள் நூரு நாட்களை தாண்டி ஓடி சாதனை படைத்துள்ளன – ஜெமினி கனேஷன் ஸ்பெஷல் – சினிமா

81

தன்னுடைய வாழ்க்கையின் பெரும்பகுதியை திரைத்துறைக்கே அர்ப்பணித்துக்கொண்ட ஜெமினிகணேசன், 2005 ம் ஆண்டு மார்ச் மாதம் 22 ம் நாள் அதிகாலை இரண்டு மணியளவில் காலமானார்.

ஜெமினிகணேசன் இந்த மண்ணுலகைவிட்டு மறைந்தாலும் அவர் விட்டுச்சென்ற திரைப்படங்களுக்கு அழிவே இல்லை. காலத்தால் அழியாத காவியத் திரைப்படங்களைக் கொடுத்த காதல் மன்னன் என்றென்றும் நம் நினைவில் வாழ்ந்துகொண்டே இருப்பார்

ஜெமினிகணேசன் தமிழில் 172 படங்களும், மலையாளத்தில் 9 படங்களும், இந்தியில் 5 படங்களும்,தெலுங்கில் 4 படங்களும் மற்றும் மர்ம வீரன், நூற்றுக்கு நூறு, அன்னை வேளாங்கண்ணி, சதி சுமதி(தெலுங்கு), ஜீசஸ் (மலையாளம்) ஆகிய படங்களில் கௌரவ வேடங்களிலும் நடித்திருக்கிறார் ஜெமினிகணேசன்.

1970 ம் ஆண்டு மத்திய அரசால் ‘பத்மஸ்ரீ’ விருது பெற்றார் ஜெமினிகணேசன்.

இவரது நடிப்புத் திறமைக்கு மரியாதை செய்யும் விதமாக, 1970 ஆம் ஆண்டு “காவியத்தலைவி” திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான தமிழ்நாடு மாநிலத் திரைப்பட விருது கிடைத்தது.1966-67ல் கலைமாமணி பட்டம் வழங்கப்பட்டது.

ஜெமினிகணேசன் நடித்ததில் 30 படங்கள் நூறு நாள்களை தாண்டி ஓடிய வெற்றி படங்கள். “கல்யாணப்பரிசு” வெள்ளி விழா கண்டது. மொத்தத்தில் சுமார் 200 படங்களில் நடித்துள்ளார் ஜெமினிகணேசன்.

You might also like
error: Alert: Content is protected !!
Now Playing:
Loading ...